Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

[X] Close

இரட்டை இலை: தேர்தல் ஆணையத்திடம் அவகாசம் கேட்கும் சசிகலா அணி!

இரட்டை இலைச் சின்னம் தொடர்பாக, பதிலளிக்க சசிகலா தரப்பில், தேர்தல் ஆணையத்திடம் அவகாசம் கேட்கப்பட்டுள்ளது.

Sasikala

ஆர்.கே. நகர் தொகுதி இடைத் தேர்தலில் இரட்டை இலைச் சின்னம் ஒதுக்குவது பற்றி மார்ச் 20-ம் தேதிக்குள் பதிலளிக்குமாறு சசிகலாவுக்கு தேர்தல் ஆணையம் நோட்டீஸ் அனுப்பி இருந்தது. முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர் செல்வம் அணியும் இரட்டை இலை சின்னத்தைக் கேட்டு தேர்தல் ஆணையத்தில் மனு அளித்திருந்தது. இதனால்தான், சசிகலா தரப்புக்கு நோட்டீஸ் அனுப்பப்பட்டு இருந்தது.

இதற்கிடையே, இரட்டை இலைச் சின்னம் ஒதுக்குவது தொடர்பாக விசாரணை செய்வதற்காக, இரு அணியினரையும் நேரில் ஆஜராக தேர்தல் ஆணையம் சம்மன் அனுப்பியுள்ளது. அதன்படி வருகின்ற 22-ம் தேதி காலை 10.30 மணிக்கு டெல்லி தலைமைத் தேர்தல் ஆணையத்தில் ஆஜராக, தேர்தல் ஆணையம் உத்தரவிட்டிருந்தது.

இந்நிலையில், இரட்டை இலைச் சின்னம் ஒதுக்கீடு தொடர்பாக பதிலளிக்க, கூடுதல் அவகாசம் தரும்படி சசிகலா தரப்பு தேர்தல் ஆணையத்திடம் கேட்டுள்ளது. இதையடுத்து, மார்ச் 21-ம் தேதி சசிகலா தரப்பு பதில் தரவேண்டும் என்று தேர்தல் ஆணையம் அவர்களுக்கு உத்தரவிட்டுள்ளது.

Advertisement
Advertisement
Advertisement

எடிட்டர் சாய்ஸ்

Advertisement

MUST READ

Advertisement
[X] Close