Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

[X] Close

ஆர்.கே.நகர் பா.ஜ.க வேட்பாளராக கங்கை அமரன் அறிவிப்பு!

gangai amaran

ஆர்.கே. நகர் தொகுதி இடைத் தேர்தலில் பா.ஜ.க வேட்பாளராக கங்கை அமரன் களமிறங்குவார் என பா.ஜ.க தேர்தல் குழுச் செயலாளர் ஜே.பி.நட்டா டெல்லியில் அறிவித்துள்ளார். இசையமைப்பாளரும், இயக்குநருமான கங்கை அமரன் பா.ஜ.கவில் இணைந்து செயல்பட்டு வந்தார். இளையராஜாவின் இளைய சகோதரர் கங்கை அமரன்.

பா.ஜ.க வேட்பாளராக கங்கை அமரன் தேர்வு செய்யப்படுவார் என நேற்று இரவே தகவல் வெளியானது. வேட்பாளர் தேர்வு தொடர்பான ஆலோசனைக் கூட்டம் நேற்று பா.ஜ.க அலுவலகத்தில் நடந்தது. ஆனால், அதிகாரபூர்வமாக அறிவிக்கப்படவில்லை. இந்நிலையில், ஆர்.கே.நகர் பா.ஜ.க வேட்பாளர் பரிசீலனையில் கங்கை அமரன், நடிகர் விஜயகுமார், காயத்ரி ரகுராம், கவுதமி பெயர்கள் அடிபட்டு வந்தன. இன்னும் மக்கள் நலக் கூட்டணி மட்டும் தனது வேட்பாளரை அறிவிக்கவில்லை. நாளை அறிவிப்பார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.

Advertisement
Advertisement
Advertisement

எடிட்டர் சாய்ஸ்

Advertisement

MUST READ

Advertisement
[X] Close