Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

[X] Close

முதல்வர் பழனிசாமியுடன், திருநாவுக்கரசர் திடீர் சந்திப்பு!

கோவை விமான நிலையத்தில், முதல்வர் பழனிசாமியும் தமிழக காங்கிரஸ் கட்சித் தலைவர் திருநாவுக்கரசரும் திடீரென நேரில் சந்தித்து வாழ்த்து தெரிவித்துக்கொண்டனர்.

கோவையில் 1,313 கோடி ரூபாய் மதிப்பிலான வளர்ச்சி திட்டப்பணிகளைத் தொடங்கிவைப்பதற்காக இன்று, சென்னை மீனம்பாக்கம் விமான நிலையத்தில் இருந்து தமிழக முதல்வர் எடப்பாடி கோவை சென்றார். இந்த விமானத்தில், தமிழக காங்கிரஸ் கட்சித் தலைவர் திருநாவுக்கரசரும் பயணம் மேற்கொண்டார். விமானத்தில் சந்திக்காத இருவரும், கோவை விமான நிலையத்தில் திடீரென சந்தித்துப் பேசினர். அப்போது, ஒருவருக்கொருவர் வாழ்த்துகளைப் பரிமாறிக்கொண்டனர்.

பின்னர் அங்கிருந்து புறப்பட்ட முதல்வர் பழனிசாமி, கோவை ஆட்சியர் அலுவலகத்தில் போலீஸாரின் அணிவகுப்பை ஏற்றுக்கொண்டார். இதையடுத்து, கோவையில் புதிதாகக் கட்டப்பட்ட மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தை முதல்வர் பழனிசாமி திறந்துவைத்தார்.

எடப்பாடி பழனிசாமி முதல்வராகப் பொறுப்பேற்ற பிறகு, முதன்முறையாக திருநாவுக்கரசர் நேரில் சந்தித்துப் பேசியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

Advertisement
Advertisement
Advertisement

எடிட்டர் சாய்ஸ்

Advertisement

MUST READ

Advertisement
[X] Close