Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

[X] Close

ஃபரூக் கொலை: திருமாவளவன் கண்டனம்!

கோவையில், திராவிடர் விடுதலைக் கழகப் பிரமுகர் ஃபரூக், கொலைசெய்யப்பட்டதற்கு விடுதலை சிறுத்தைகள் கட்சித் தலைவர் தொல். திருமாவளவன் கண்டனம் தெரிவித்துள்ளார்.

Thirumavalavan

கோவை, உக்கடம் பகுதியைச் சேர்ந்தவர் ஃபரூக். இரும்பு வியாபாரம் செய்துவந்த இவர், திராவிட விடுதலைக் கழகத்தில் தீவிர தொண்டராகச் செயல்பட்டுவந்தார். இந்நிலையில், உக்கடம் அருகே நேற்று முன்தினம் அவர் மர்ம நபர்களால் படுகொலை செய்யப்பட்டார். இதுகுறித்து காவல்துறையினர் விசாரணை நடத்திவருகின்றனர். இந்நிலையில், இந்தச் சம்பவத்துக்கு அரசியல் கட்சித் தலைவர்கள் கண்டனம் தெரிவித்தனர்.

திராவிட விடுதலைக் கழகத்தைச் சேர்ந்தவர்கள், மாநிலம் முழுவதும் போராட்டத்தில் ஈடுபட்டு வந்தனர். இதற்கிடையே, மனிதநேய மக்கள் கட்சி, எஸ்.டி.பி.ஐ உள்ளிட்ட இஸ்லாமிய அமைப்புகளும் இந்தச் சம்பவத்துக்கு கண்டனம் தெரிவித்திருந்தன. இந்நிலையில், விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் தொல்.திருமாவளவனும் கண்டனம் தெரிவித்துள்ளார். 'குற்றவாளிகளை விரைந்து பிடித்து அவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்' என்று வலியுறுத்தியுள்ளார்.

Stay Updated with Tamil Flash News - Facebook's 'FbStart' Tamil APP

தமிழ்நாடு சார்ந்த செய்திகளை உடனுக்குடன் தமிழ் ஃப்ளாஷ் நியூஸ் அப்ளிகேஷனில் தெரிந்துகொள்ளலாம். இதுதான் நம்பர் ஒன் தமிழ் நியூஸ் ஆப்!

பயன்படுத்த க்ளிக் http://bit.ly/FreeTFN

Advertisement
Advertisement
Advertisement
Advertisement
Advertisement

எடிட்டர் சாய்ஸ்

Advertisement

MUST READ

Advertisement
[X] Close