Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

[X] Close

மக்கள் நலக்கூட்டணியில் பிளவா? திருமாவளவன் பேட்டி

thirumavalavan

'ஆர்.கே.நகர் தொகுதி இடைத்தேர்தலில் விடுதலைச் சிறுத்தைகள் கட்சி போட்டியிடாது. மக்கள் நலக் கூட்டியக்கத்துடன் தோழமை தொடரும்' என்று அக்கட்சியின் தலைவர் திருமாவளவன் தெரிவித்துள்ளார்.

சென்னையில் இன்று செய்தியாளர்களிடம் பேசிய அவர், 'மக்கள் நலக்கூட்டணி ஆலோசனை கூட்டங்களில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சி இடைத்தேர்தலில் போட்டியிட வேண்டாம் என்றது. மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் போட்டியிடலாம் என்றது. இரு கம்யூனிஸ்ட் கட்சிகளும் ஒரு முடிவு எடுத்தால், அதில் நாங்கள் உடன்படுவோம் என்றோம். ஆனால், ஒருமித்த முடிவு எட்டப்படவில்லை.

மார்க்சிஸ்ட் கட்சி, இடைத்தேர்தலில் போட்டியிடுவதில் உறுதியாக உள்ளது. ஆனால், விடுதலைச் சிறுத்தைகள் இதில் போட்டியிடாது. தேர்தலில் கூட்டணி இல்லாமல் போனாலும், போராட்டக் களங்களில் இரு கம்யூனிஸ்ட் கட்சிகளுடனும் சேர்ந்து செயல்படுவோம். தேர்தலுக்கு அப்பால், மக்கள் நலக் கூட்டியக்கம் இணைந்து செயல்படும். மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் இந்த முடிவால், எங்களுக்குள் எந்த கசப்பும் இல்லை' என்று கூறினார்.

Advertisement
Advertisement
Advertisement
Advertisement
Advertisement

எடிட்டர் சாய்ஸ்

Advertisement

MUST READ

Advertisement
[X] Close