Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

[X] Close

மீனவர்களை எச்சரிக்கும் மீன்வளத்துறை!

இந்திய மீனவர் பிரிட்ஜோ இலங்கைக் படற்படையால் சுட்டுக் கொல்லப்பட்ட பிறகு, மீனவர்கள் தொடர் போராட்டத்தில் ஈடுபட்டு வந்தனர். இதையடுத்து, மத்திய அரசு அளித்த உறுதியை அடுத்து அவர்கள் கடந்த வாரம் போராட்டத்தை வாபஸ் பெற்றனர். இதற்கிடையே கடந்த வாரம், டெல்லி சென்ற மீன்வளத்துறை அமைச்சர் ஜெயக்குமார், மத்திய வெளியுறவுத்துறை அமைச்சர் சுஷ்மா ஸ்வராஜை சந்தித்து, மீனவர் பிரச்னையில் விரைந்து நடவடிக்கை எடுக்க வலியுறுத்தினார்.

Fishers

இந்நிலையில், வேலை நிறுத்தப் போராட்டம் வாபஸ் பெற்றப் பிறகு, 11 நாட்களுக்கு பின், ராமேஸ்வர மீனவர்கள், மீன்பிடிக்க நேற்று கடலுக்குச் சென்றிருந்தனர் அப்போது, கச்சத்தீவு அருகே இலங்கைக் கடற்படை விடிய, விடிய ரோந்துப் பணியில் ஈடுபட்டதாக மீனவர்கள் குற்றம் சாட்டியுள்ளனர். இதனால், மீன் பிடிக்க முடியவில்லை, ரூ.2 கோடி வரை நஷ்டம் ஏற்பட்டதாக மீனவர்கள் வேதனை தெரிவித்தனர்.

இந்நிலையில், மீனவர்கள் எல்லைதாண்டி மீன்பிடிக்கக்கூடாது என மீன்வளத்துறை எச்சரிக்கை விடுத்துள்ளது. அதில், 'மீனவர்கள் இந்திய எல்லையைத் தாண்டி மீன்பிடிக்கச் செல்லக்கூடாது. அரசால் தடைசெய்யப்பட்ட வலைகளைக் கொண்டு மீனவர்கள் மீன்பிடிக்கக் கூடாது. இதை மீறுபவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என்று மீன்வளத்துறை எச்சரிக்கை விடுத்துள்ளது.

Advertisement
Advertisement
Advertisement

எடிட்டர் சாய்ஸ்

Advertisement

MUST READ

Advertisement
[X] Close