Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

[X] Close

ஜெயலலிதா கையால் சாதனை நாயகன் விருது பெற்ற காவலர் கைது

மறைந்த முதல்வர் ஜெயலலிதா கையால் சாதனை நாயகன் விருது பெற்ற காவலர் வேல்முருகன் கைது செய்யப்பட்டுள்ளார்.

Velmurugan

வேல்முருகன் இரண்டாம் நிலை காவலராக தேனி மாவட்டம் ஓடைபட்டி கிராமத்தில் உள்ள காவல் நிலையத்தில் பணியாற்றி வருகிறார். இவர், மறைந்த முதல்வர் ஜெயலலிதாவின் தீவிர பற்றாளர் ஆவார். ஜெயலலிதாவுக்கு நெருக்கடி வந்த சமயங்களில் எல்லாம் தனது எதிர்ப்பை தேனி மாவட்டத்தில் வலுவாகப் பதிவு செய்தவர். தனிப்பட்ட முறையில் பல்வேறு சாதனைகள் செய்து ஜெயலலிதா கையால் விருதுகளைப் பெற்றவர்.

ஜெயலலிதாவுடன் காவலர் வேல்முருகன்

ஜெயலலிதா மறைந்ததிலிருந்து தனது வேலையை விட்டு விட்டு, ஜெ வுக்கு தனது சொந்த ஊரான குச்சனூரில் கோவில் கட்டப் போவதாக அறிவித்திருந்தார். இதற்கிடையே கடந்த மாதம் திடீரென துறை ரீதியான நடவடிக்கை எடுக்கப்பட்டு பணி இடை நீக்கம் செய்யப்பட்டார்.

இந்நிலையில், இன்று மறைந்த முதல்வர் ஜெ வின் சாவில் உள்ள மர்மத்தை விடுவிக்குமாறு கோரிக்கை வைத்து கூடலூர் பென்னி குக் மணி மண்டபத்திலிருந்து சென்னை வரை ஓட்டப் பயணம் அறிவித்தார். இதையடுத்து, இன்று காலை அவரை குண்டுக்கட்டாக துக்கிச் சென்ற போலீசார் அவரிடம் விசாரணை  நடத்தி வருகின்றனர்.

- சக்தி அருணகிரி

Stay Updated with Tamil Flash News - Facebook's 'FbStart' Tamil APP

தமிழ்நாடு சார்ந்த செய்திகளை உடனுக்குடன் தமிழ் ஃப்ளாஷ் நியூஸ் அப்ளிகேஷனில் தெரிந்துகொள்ளலாம். இதுதான் நம்பர் ஒன் தமிழ் நியூஸ் ஆப்!

பயன்படுத்த க்ளிக் http://bit.ly/FreeTFN

Advertisement
Advertisement
Advertisement
Advertisement
Advertisement

எடிட்டர் சாய்ஸ்

Advertisement

MUST READ

Advertisement
[X] Close