Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

[X] Close

துறைமுகத்தில் இரண்டாவது நாளாக சோதனை

சென்னை துறைமுகத்தில் இரண்டாவது நாளாக சோதனை நடைபெறுவதால் சரக்கு லாரிகள் சரக்குகளை ஏற்ற முடியாமலும் இறக்க முடியாமலும் நீண்ட வரிசையில் நிற்கின்றன.

சென்னை துறைமுகத்தில் உள்ள கன்ட்டெய்னர்களில் கடந்த இரண்டு தினங்களாக மத்திய அரசு அதிகாரிகள் கடுமையான சோதனைகளில் ஈடுபட்டு வருகின்றனர். கன்ட்டெய்னர்கள் மூலம் கள்ள நோட்டுகள் கடத்துவதாக தகவல்கள் வந்ததையடுத்து மத்திய வருவாய் புலனாய்வு மற்றும் சுங்கத் துறையினர் கடுமையான சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர்.

குறிப்பாக மார்ச்-1 ம் தேதிக்குப் பிறகு வந்த கன்ட்டெய்னர்கள் அதிகமான சோதனைக்கு உட்படுத்தப்படுகின்றன என்று தகவல் தெரிவிக்கின்றனர். எனினும் இந்த சோதனைகள் குறித்து அரசுத்துறை அதிகாரிகள் அதிகாரபூர்வ அறிவிப்பு வெளியிடவில்லை. சென்னை துறைமுகம் மட்டுமல்லாது, மும்பை, கொல்கத்தா துறைமுகங்களிலும் சோதனைகள் நடைபெறுவதாகவும் தகவல்கள் கிடைத்துள்ளன.

இருப்பினும் எந்தத் தகவல்களும் இதுவரையில் உறுதிப்படுத்தப்படவில்லை. அரசுத் துறை அதிகாரிகளின் இந்தச் சோதனையால் சரக்கு லாரி உரிமையாளர்களும், லாரி ஓட்டுநர்களும் அதிகமாக பாதிக்கப்பட்டுள்ளனர்.

சரக்கு ஏற்ற, இறக்க முடியாமல் நீண்டநேரமாக காத்துகிடக்கின்றனர். வழக்கமாக ஒரு நாளைக்கு 1500 சரக்கு லாரிகள் சரக்குகளை ஏற்றி வரும் நிலையில், தற்போது சோதனை நடைபெறுவதால் 700 லாரிகள் வரை மட்டுமே சரக்குகளை ஏற்ற முடிகிறது. 

Advertisement
Advertisement
Advertisement

எடிட்டர் சாய்ஸ்

Advertisement

MUST READ

Advertisement
[X] Close