Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

[X] Close

சுஷ்மா ஸ்வராஜை சந்திக்க, ராமேஸ்வரம் மீனவர்கள் டெல்லி பயணம்!

மத்திய வெளியுறவுத்துறை அமைச்சர் சுஷ்மா ஸ்வராஜை சந்திப்பதற்காக, ராமேஸ்வரம் மீனவப் பிரதிநிதிகள் டெல்லிக்குப் புறப்பட்டுச் சென்றனர்.

Fishermen

இந்திய மீனவர் பிரிட்ஜோ, இலங்கைக் கடற்படையால் சுட்டுக் கொல்லப்பட்டப் பிறகு, மீனவர்கள் தொடர் போராட்டத்தில் ஈடுபட்டு வந்தனர். இதையடுத்து, மத்திய அமைச்சர்கள் நிர்மலா சீத்தராமன், பொன். ராதாகிருஷ்ணன் ஆகியோர் மீனவர்களுடன் பேச்சுவார்தையில் ஈடுபட்டனர். அப்போது, மீனவர்களின் கோரிக்கையை நிறைவேற்றுவதாக அவர்கள் உறுதியளித்தனர். இதனால் மீனவர்கள் போராட்டத்தை வாபஸ் பெற்றனர்.

இந்நிலையில், மத்திய வெளியுறவுத்துறை அமைச்சர் சுஷ்மா ஸ்வராஜை சந்திப்பதற்காக, ராமேஸ்வரம் மீனவ பிரதிநிதிகள் இன்று டெல்லி புறப்பட்டு சென்றனர். இதையடுத்து, அவர்கள் நாளை சுஷ்மாவை சந்திக்கின்றனர்.

அப்போது, பிரிட்ஜோ கொலை, இலங்கைக் கடற்படை செய்யும் அத்துமீறல்கள் உள்பட மீனவர்கள் எதிர்கொள்ளும் பல்வேறு  பிரச்னைகளை சுஷ்மாவிடம், முன் வைக்க உள்ளனர். 11 பேர் கொண்ட அந்த குழுவில் ஆறு மீனவர்களும், ஐந்து பா.ஜ.க பிரமுகர்களும் உள்ளனர்.

Advertisement
Advertisement
Advertisement

எடிட்டர் சாய்ஸ்

Advertisement

MUST READ

Advertisement
[X] Close