Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

[X] Close

இன்று மீண்டும் கூடுகிறது தமிழக சட்டசபை

பட்ஜெட் பொது விவாதத்துக்காக, தமிழக சட்டசபை இன்று மீண்டும் கூடுகிறது.

TN Assembly

தமிழக பட்ஜெட் கடந்த 16-ம் தேதி தாக்கல் செய்யப்பட்டது. எடப்பாடி பழனிசாமி தலைமையிலான அரசின் முதல் பட்ஜெட்டை, நிதி அமைச்சர் ஜெயக்குமார் தாக்கல் செய்தார். அதில் புதிய வரிகள் ஏதும் விதிக்கப்படவில்லை. இதையடுத்து, கடந்த மூன்று நாள்கள் விடுமுறை அளிக்கப்பட்டு இருந்தது.

இந்நிலையில், மூன்று நாள் விடுமுறைக்குப் பின் தமிழக சட்டசபை இன்று காலை 10 மணிக்கு மீண்டும் கூடுகிறது. அப்போது, பட்ஜெட் மீதான பொது விவாதம் துவங்கும். முதலில், மறைந்த முன்னாள் உறுப்பினர்களுக்கு, பேரவையில் இரங்கல் தெரிவிக்கப்படும்.

அதைத் தொடர்ந்து விவாதம் நடைபெறும். வருகின்ற 24-ம் தேதி வரை, பட்ஜெட் மீதான பொது விவாதம் நடைபெறுகிறது. இதில் ஒவ்வொறு துறை மீதும் எழுப்பப்படும் கேள்விகளுக்கு, அந்த துறை சார்ந்த அமைச்சர் பதிலளிப்பார்.

Stay Updated with Tamil Flash News - Facebook's 'FbStart' Tamil APP

தமிழ்நாடு சார்ந்த செய்திகளை உடனுக்குடன் தமிழ் ஃப்ளாஷ் நியூஸ் அப்ளிகேஷனில் தெரிந்துகொள்ளலாம். இதுதான் நம்பர் ஒன் தமிழ் நியூஸ் ஆப்!

பயன்படுத்த க்ளிக் http://bit.ly/FreeTFN

Advertisement
Advertisement
Advertisement
Advertisement
Advertisement

எடிட்டர் சாய்ஸ்

Advertisement

MUST READ

Advertisement
[X] Close