Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

[X] Close

'ஒரு பாடல், இசையமைப்பாளருக்கு மட்டும் சொந்தமானதல்ல' - மதன் கார்க்கி

எஸ்.பி.பி-க்கு, இளையராஜா நோட்டீஸ் அனுப்பிய சம்பவம் குறித்து, மதன் கார்க்கி தனது ஃபேஸ்புக் பக்கத்தில் கருத்து தெரிவித்துள்ளார்.

Madhan Karky

காப்புரிமைக்காக, பாடகர் எஸ்.பி.பாலசுப்பிரமணியனுக்கு  இளையராஜா நோட்டீஸ் அனுப்பியுள்ள சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்தச் சம்பவத்துக்கு, இளையராஜாவின் சகோதரர் கங்கை அமரனே எதிர்ப்பு தெரிவித்து இருந்தார்.  இந்நிலையில் இந்த விவகாரம் குறித்து, மதன்கார்க்கி தனது ஃபேஸ்புக் பக்கத்தில் கருத்து தெரிவித்துள்ளார்.

அதில், 'சட்டரீதியாக இளையராஜா செய்தது சரியாக இருக்கலாம். ஒரு பாடல், இசையமைப்பாளர், பாடலாசிரியர், தயாரிப்பாளர் ஆகிய மூவருக்கும் சொந்தமானது. நட்பு ரீதியாக, அவர் ஒரு போன் கால் மூலமாகவே  முடித்திருக்கலாம்.

ஒரு பாடல், வெளி இடங்களில் எப்போது இசைக்கப்பட்டாலும்,  இசையமைப்பாளர், பாடலாசிரியர், தயாரிப்பாளர் ஆகியோருக்குதான் அதன் காப்புரிமை சொந்தம். ராஜா சாரும் தனது பாடலை வெளி இடத்தில் இசையமைக்கும்போது, அதன் காப்புரிமை அதன் பாடலாசிரியருக்கும், தயாரிப்பாளருக்கும் செல்ல வேண்டும்.

பாடலாசிரியர்களும் தயாரிப்பாளர்களும் இளையராஜாவுக்கு நோட்டீஸ் அனுப்பினால், அவர்களது அனுமதி இல்லாமல், வெளி இடங்களில் இளையராஜா இசையமைக்க முடியாது ' எனக் கூறியுள்ளார்.

உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்

Advertisement
Advertisement
Advertisement

எடிட்டர் சாய்ஸ்

Advertisement

MUST READ

Advertisement
[X] Close