Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

[X] Close

சிட்டுக்குருவி இனம். சட்டப்பேரவையில் வனத்துறை அமைச்சர் அளித்த உறுதி!

சிட்டுக்குருவி இனத்தைப் பாதுகாக்க நடவடிக்கை எடுக்கப்படும் என்று சட்டப்பேரவையில் வனத்துறை அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசன் உறுதியளித்தார்.

2017-18-ம் ஆண்டுக்கான நிதிநிலை அறிக்கையை கடந்த 16-ம் தேதி தமிழக சட்டப்பேரவையில் நிதியமைச்சர் ஜெயக்குமார் தாக்கல் செய்தார். இதையடுத்து, மூன்று நாள் விடுமுறைக்குப் பின்னர், சட்டப்பேரவை இன்று காலை தொடங்கியது. இந்தக் கூட்டத்தில், மறைந்த முன்னாள் எம்எல்ஏ-க்கள் மெய்யப்பன், பாலையா, செல்லையா, விஸ்வநாதன் ஆகியோருக்கு இரங்கல் குறிப்பு வாசிக்கப்பட்டன.

இதைத்தொடர்ந்து, பட்ஜெட் மீதான விவாதம் தொடங்கியது. அப்போது, விழுப்புரத்தில் பறவைகள் சரணாலயம் அமைக்கப்படுமா என உறுப்பினர் சக்கரபாணி கேள்வி எழுப்பினார். அதற்குப் பதில் அளித்த அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசன், விழுப்புரம் அருகே வானூர் கழுவெளியில் பறவைகள் சரணாலயம் அமைக்கப்படும். கூந்தன்குளம் பறவைகள் சரணாலயத்தைப் பராமரிக்க நடவடிக்கை எடுக்கப்படும். சிட்டுக்குருவி இனத்தைப் பாதுகாக்க நடவடிக்கை எடுக்கப்படும் என்று தெரிவித்தார்.

Stay Updated with Tamil Flash News - Facebook's 'FbStart' Tamil APP

தமிழ்நாடு சார்ந்த செய்திகளை உடனுக்குடன் தமிழ் ஃப்ளாஷ் நியூஸ் அப்ளிகேஷனில் தெரிந்துகொள்ளலாம். இதுதான் நம்பர் ஒன் தமிழ் நியூஸ் ஆப்!

பயன்படுத்த க்ளிக் http://bit.ly/FreeTFN

Advertisement
Advertisement
Advertisement
Advertisement
Advertisement

எடிட்டர் சாய்ஸ்

Advertisement

MUST READ

Advertisement
[X] Close