Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

[X] Close

நடிகை ரம்பாவுக்கு உயர்நீதிமன்றம் அறிவுரை!

கணவன்-மனைவி இருவருக்கும் இடையேயான பிரச்னையை இன்று மாலை 6 மணிக்குள் சமரச மையத்தில் பேசித் தீர்க்க, ரம்பாவுக்கும் அவரது கணவருக்கும் சென்னை உயர்நீதிமன்றம் அறிவுரை வழங்கியுள்ளது.

கனடா தொழில் அதிபர் இந்திரன் பத்மநாதன் என்பவரை கடந்த 2010-ம் ஆண்டு நடிகை ரம்பா திருமணம் செய்துகொண்டார். இவர்களுக்கு இரண்டு குழந்தைகள் இருக்கிறார்கள். இந்நிலையில், இருவருக்கும் இடையே ஏற்பட்ட கருத்துவேறுபாடு காரணமாகப் பிரிந்து வாழ்ந்து வருகின்றனர்.

இதனிடையே, கணவரைத் தன்னுடன் சேர்த்து வைக்கக்கோரி, சென்னை உயர்நீதிமன்றத்தில் ஆட்கொணர்வு மனு ஒன்றைத் தாக்கல் செய்தார் ரம்பா. அதில், இரண்டு பெண் குழந்தைகளுடன் தனியாக வாழ முடியவில்லை. குடும்ப வாழ்க்கையைத் தற்போது புரிந்துகொண்டுவிட்டேன். கருணை அடிப்படையில் தன் கணவருடன் தன்னைச் சேர்த்துவைக்க வேண்டும் என்று குறிப்பிட்டிருந்தார்.

இந்த வழக்கு, உயர்நீதிமன்றத்தில் இன்று விசாரணைக்கு வந்தது. அப்போது, ரம்பா தனது இரண்டு குழந்தைகளுடன் ஆஜரானார். அவரது கணவரும் நீதிமன்றத்தில் ஆஜரானார். அப்போது, கணவன்-மனைவி இருவருக்கும் இடையேயான பிரச்னையை இன்று மாலை 6 மணிக்குள் சமரச மையத்தில் பேசித் தீர்க்க ரம்பாவுக்கும், அவரது கணவருக்கும் சென்னை உயர்நீதிமன்றம் அறிவுரை வழங்கியுள்ளது.

Advertisement
Advertisement
Advertisement

எடிட்டர் சாய்ஸ்

Advertisement

MUST READ

Advertisement
[X] Close