Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

[X] Close

'சொம்பு இருந்தாதான் மாப்பிள்ளை தாலி கட்டுவாராம் கதைதான்!’ - 'நீயா நானா' நிவேதா வேதனை #VikatanExclusive

ஞாயிற்றுக்கிழமை ஒளிபரப்பான 'நீயா நானா' நிகழ்ச்சியில் நிவேதா சுவாமிநாதன் சொன்ன கருத்துதான்  இரண்டு நாட்களாக மீம் கிரியேட்டர்களுக்கு முரட்டுத் தீனி. 'நீயா நானா' நிகழ்ச்சியில் ஹெலிகாப்டர் கல்யாணம் வேண்டுமென இவர் சொல்ல,  அது சமூகவலைதளம் முழுக்க  மீம்ஸ்களாக ஆக்கிரமித்துக்கொண்டது. 'என்னம்மா... ஏதம்மா...'னு விசாரிக்க நிவேதாவை தொடர்பு கொண்டோம்.

“எனக்குச் சொந்த ஊர் கும்பகோணம். இங்கே சென்னையில ஜர்னலிசம் படிச்சுக்கிட்டு இருக்கேன். நான் சொன்னதா மீம் போட்டவங்க யாரும் அந்த ஷோ முழுசா பார்த்தாங்களான்னு எனக்குத் தெரியலை. எந்த மாதிரியான கல்யாணம் வேணும்னு கேட்டதுக்கு, ஹெலிகாப்டர் கல்யாணம் இருந்தா நல்லா இருக்கும்னு சொன்னேன். ஒரு நாள் ஹெலிகாப்டர் வாடகைக்கு எடுத்து அதுல கல்யாணம் நடந்தா நல்லா இருக்கும் அப்டிங்குறது  பெண்கள் மத்தியில் இருக்கும் ஒரு பொதுவான ஆசைதான். ஆனா எல்லோரும் ஹெலிகாப்டர் இருந்தா தான் கல்யாணம் பண்ணிக்குவேன்னு சொன்னதா மீம் போட ஆரம்பிச்சுட்டாங்க. 

நீயா நானா

இப்போ வரைக்கும் நான் என்னோட ஃபேஸ்புக் ஓபன் பண்ணலை. நைட் எல்லாம் தூக்கம் இல்ல...  மனசெல்லாம் ஒரு மாதிரி இருந்துச்சுன்னு இன்னைக்கு காலேஜ் லீவு போட்டுட்டேன். எனக்கு மீம்ஸ் பிடிக்கும். நானும் மீம்ஸ் எல்லாம் போடுவேன்தான். ஆனா நாம சொல்லாத இரு விஷயம் இப்படி மீம்ஸா வருதேன்னு நினைச்சு ரொம்பவே அப்செட் ஆகிடுச்சு. வடிவேலு ஒரு படத்தில் குடிக்கத் தண்ணி கேட்க, 'சொம்பு கொடுத்தாதான் மாப்பிள்ளை தாலி கட்டுவாராம்..!'னு கிளப்பி விடுவாங்க. அந்தக் காமெடிதான் ஞாபகம் வந்துச்சு. இன்னொரு முக்கியமான விஷயம் நானே வரதட்சனைக்கு எதிரான பொண்ணுதான் தெரியுமா?" என வேதனையோடு சொன்னார் நிவேதா.

நிவேதாவின் அப்பாவைத் தொடர்புகொண்டு இதுபற்றிக் கேட்டால்,

"ஆமாம்...நேத்து நைட் போன் பண்ணி அழ ஆரம்பிச்சுட்டாங்க. இந்த விஷயத்தைக் கேள்விப்பட்டதும், என்னடா இது வெளியூர்ல படிக்கிற புள்ள கண்ணைக் கசக்கிட்டு நிற்குதேன்னு பொண்ணைப் பெத்த அப்பாவா கொஞ்சம் கஷ்டமாதான் இருந்துச்சு. இதையெல்லாம் சாதாரணமா கடந்து போயிடணும். இன்னைக்கு இந்த விஷயம் இருக்கும்... இன்னும் ரெண்டு நாள்ல வேற விஷயம் கிடைச்சா இதை மறந்திடுவாங்க. அதுவும் ஜர்னலிசம் படிக்கிற பொண்ணு இப்படி கண்ணைக் கசக்கிட்டு நிக்கலாமான்னு அட்வைஸ் பண்ணினோம்" என்கிறார்.

புறாவுக்குப் போரா? பெரிய அக்கப்போராகவல்லவா இருக்கிறது..!

- ந.புஹாரி ராஜா

உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்

Advertisement
Advertisement
Advertisement

எடிட்டர் சாய்ஸ்

Advertisement

MUST READ

Advertisement
[X] Close