Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

[X] Close

ஜெயலலிதா மரணத்தை விசாரிக்கக்கோரி வழக்கு! மத்திய அரசு கைவிரிப்பு

ஜெயலலிதா மரணம் தொடர்பாக விசாரிக்க, மத்திய அரசால் குழு அமைக்க முடியாது என்று சென்னை உயர்நீதிமன்றத்தில் மத்திய உள்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.

ஜெயலலிதா மரணத்தில் மர்மம் இருப்பதாக ஓ.பன்னீர்செல்வம் அணியினரும், எதிர்க்கட்சிகளும் குற்றம்சாட்டி வருகின்றனர். இந்நிலையில், ஜெயலலிதா மரணம்குறித்து உச்சநீதிமன்ற நீதிபதிகள் குழு விசாரிக்கக்கோரி, சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டுள்ளது.

இந்த வழக்கு, உயர்நீதிமன்றத்தில் இன்று விசாரணைக்கு வந்தது. அப்போது, மத்திய அரசின் உள்துறை அமைச்சக சார்புச் செயலாளர் மணிராம், இன்று பதில் மனு தாக்கல்செய்தார்.

அதில், "ஜெயலலிதா மரணம் தொடர்பாக விசாரணைக் குழுவை மத்திய அரசு அமைக்க முடியாது; மாநில அரசுக்குதான் அதிகாரம் உள்ளது. விசாரணைக் குழு கோரும் வழக்கில், எதிர் மனுதாரராக மத்திய அரசைச் சேர்க்க முடியாது. இந்த வழக்கில் இருந்து மத்திய அரசை விடுவிக்க வேண்டும்" என்று கூறப்பட்டுள்ளது.

உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்

Advertisement
Advertisement
Advertisement

எடிட்டர் சாய்ஸ்

Advertisement

MUST READ

Advertisement
[X] Close