Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

[X] Close

'பணப்பட்டுவாடா தொடர்பாக தேர்தல் ஆணையத்திடம் புகார்'- ஸ்டாலின் பகீர்

MK Stalin

அண்ணா அறிவாலயத்தில் செய்தியாளர்கள் சந்தித்த தி.மு.க-வின் செயல் தலைவர் மு.க.ஸ்டாலின், 'தேர்தலில் பணப்பட்டுவாடா நடப்பது குறித்து தேர்தல் ஆணையத்திடம் புகார் கொடுத்துள்ளோம்' என்று கூறியுள்ளார்.

மேலும் ஸ்டாலின், 'இப்போது நடந்து கொண்டிருக்கும் சசிகலாவின் பினாமி ஆட்சியின் கவலையெல்லாம், ஆட்சியை தக்கவைத்துக் கொள்வதில்தான் இருக்கிறது. மக்களின் பிரச்னைகளில் தீர்ப்பதில் அவர்களுக்கு அக்கறை இல்லை. சபாநாயகர் மீதான நம்பிக்கையில்லா தீர்மானம் இந்தக் கூட்டத்தொடரிலேயே நிச்சயமாக எடுத்துக் கொள்ளப்படும் என்று உறுதியளிக்கப்பட்டு இருக்கிறது. தேர்தலில் பணப்பட்டுவாடா நடப்பது குறித்து தேர்தல் ஆணையத்திடம் முன்னரே புகார் கொடுத்துள்ளோம். தொடர்ச்சியாக அதைப் பற்றிய விபரங்களை தேர்தல் ஆணையத்தின் பார்வைக்குக் கொண்டு செல்வோம். ஆர்.கே.நகரில் வேட்புமனுத் தாக்கல் செய்யப்பட்ட பிறகு தேர்தல் பிரசாரம் செய்யும் பணிகள் ஆரம்பிக்கப்படும்.' என்று பேசியுள்ளார்.

 

Stay Updated with Tamil Flash News - Facebook's 'FbStart' Tamil APP

தமிழ்நாடு சார்ந்த செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள... தமிழ் ஃப்ளாஷ் நியூஸ் அப்ளிகேஷன்! ஃபேஸ்புக்குக்கே பிடித்த நம்பர் 1 தமிழ் நியூஸ் ஆப்... Tamil Flash News..!

பதிவிறக்க... க்ளிக் http://bit.ly/FreeTFN

Advertisement
Advertisement
Advertisement
Advertisement
Advertisement

எடிட்டர் சாய்ஸ்

Advertisement

MUST READ

Advertisement
[X] Close