Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

[X] Close

மதுரை போலீஸ் இன்ஸ்பெக்டருக்கு 10 ஆண்டு சிறை

inspector sethumani

மாணவி அகிலாண்டேஸ்வரி மர்ம மரணம் தொடர்பான வழக்கில் மதுரை தெப்பக்குளம் இன்ஸ்பெக்டர் சேதுமணி மாதவனுக்கு 10 வருட சிறை தண்டனை வழங்கப்பட்டுள்ளது.

கல்லூரி மாணவி அகிலாண்டேஸ்வரி என்பவரை பண மோசடி செய்ததாக பொய் வழக்கில் தஞ்சாவூருக்கு விசாரணைக்கு அழைத்து வந்து அப்போது அங்கு பணியாற்றிய இன்ஸ்பெக்டர் சேதுமணி மாதவன், பாலியல் பலாத்காரம் செய்து கொன்று விட்டு தற்கொலை செய்து கொண்டதாக நாடகம் ஆடுகிறார் என்று குற்றம் சுமத்தப்பட்டது. இதனை சி.பி.சி.ஐ.டி போலீஸ் விசாரணை செய்தனர்.

inspector sethumani

இது தொடர்பாக தஞ்சாவூர் மகளிர் நீதிமன்றம், தற்போது மதுரையில் பணியாற்றும் இன்ஸ்பெக்டர் சேதுமணி மாதவனுக்கு 10 ஆண்டு சிறை தண்டனை விதித்து இன்று தீர்ப்பு கூறியுள்ளது. இத்தீர்ப்பை கேட்டு மதுரை மக்கள் கொண்டாடுகிறார்கள். அந்தளவுக்கு சேதுமணி மாதவனால் பல அப்பாவிகள் பாதிக்கப்பட்டுள்ளார்கள் என மதுரை வட்டாரத்தினர் புலம்புகின்றனர். சமீபத்தில், ஜல்லிக்கட்டு போராட்டத்தில் இயக்குநர் கௌதமன் உட்பட பல மாணவர்களை கடுமையாக தாக்கியவர் இவர்.

செய்தி: செ.சல்மான்

படம்: ஈ.ஜெ.நந்தகுமார்

Advertisement
Advertisement
Advertisement
Advertisement
Advertisement

எடிட்டர் சாய்ஸ்

Advertisement

MUST READ

Advertisement
[X] Close