Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

[X] Close

10 தமிழக மீனவர்கள் கைது! இலங்கைக் கடற்படை மீண்டும் அட்டூழியம்!

தமிழக மீனவர்கள் 10 பேரை, இலங்கைக் கடற்படை கைதுசெய்துள்ளது. 

10 tamil fishermen arrested

மீனவர் பிரிட்ஜோ, கடந்த 6-ம் தேதி, இலங்கைக் கடற்படையால் சுட்டுக் கொலைசெய்யப்பட்டார். இதையடுத்து, மீனவர்கள் தொடர் போராட்டத்தில் ஈடுபட்டுவந்தனர். பிறகு, மத்திய அமைச்சர்கள், நிர்மலா சீதாராமன், பொன். ராதாகிருஷ்ணன் ஆகியோர், மீனவர்களுடன் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டனர். அப்போது, மீனவர்களின் கோரிக்கையை நிறைவேற்றுவதாக அவர்கள் உறுதியளித்தனர். அதைத் தொடர்ந்து மீனவர்கள் போராட்டத்தை வாபஸ்பெற்றனர்.

இந்நிலையில், ராமேஸ்வரத்தைச் சேர்ந்த மீனவர்கள், நேற்று மாலை மீன் பிடிக்க கடலுக்குச் சென்றிருந்தனர். அப்போது, கச்சத்தீவு அருகே அவர்கள் மீன்பிடித்துக் கொண்டிருந்தபோது, அவர்களை இலங்கைக் கடற்படை கைதுசெய்துள்ளது. கச்சத்தீவு அருகே பழுதாகி நின்ற ஜஸ்டின் என்பவரது படகில் இருந்த 10 மீனவர்களை இலங்களைக் கடற்படை கைது செய்துள்ளது. இதைத்தொடர்ந்து கைது செய்யப்பட்ட மீனவர்கள், படகுடன் காங்கேசன் கடற்படை முகாமுக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளனர்.

ராமேஸ்வரத்தைச் சேர்ந்த மீனவர்கள் குழு, மத்திய வெளியுறவுத் துறை அமைச்சர் சுஷ்மா ஸ்வராஜை சந்திப்பதற்காக, டெல்லி சென்றுள்ளனர். இன்று அவர்கள் சுஷ்மாவைச் சந்திக்க உள்ள நிலையில், இந்தச் சம்பவம் நடந்துள்ளது.

Advertisement
Advertisement
Advertisement

எடிட்டர் சாய்ஸ்

“மாட்டின் மீதான அக்கறை, சிசுக்கள் மீது கிடையாதா?!” நெஞ்சு பொறுக்குதில்லையே #GorakhpurTragedy
Advertisement

MUST READ

Advertisement
[X] Close