Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

[X] Close

ஆர்.கே.நகர் தொகுதிக்கு நாம் தமிழர் கட்சி வேட்பாளர் கலைக்கோட்டு உதயம்!

ஆர்.கே.நகர் இடைத்தேர்தலில், நாம் தமிழர் கட்சியின் வேட்பாளராக கலைகோட்டு உதயம் அறிவிக்கப்பட உள்ளார்.

ஆர்.கே.நகர் இடைத்தேர்தல் வருகின்ற ஏப்ரல் 12-ம் தேதி நடக்கிறது. இதற்கான வேட்புமனு தாக்கல் தற்போது நடைபெற்றுவருகிறது. இதில், அ.தி.மு.க, தி.மு.க, தே.மு.தி.க, பா.ஜ.க, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் உள்ளிட்ட கட்சிகளின் வேட்பாளர்கள் அறிவிக்கப்பட்டுள்ளனர்.

Kalaikottudhayam


இதில், அ.தி.மு.க சசிகலா அணியில் டி.டி.வி தினகரன், பன்னீர்செல்வம் அணியில் மதுசூதனன், தி.மு.க-வில் மருது கணேஷ், தே.மு.தி.க-வில் மதிவாணன், பா.ஜ.க-வில் கங்கை அமரன் போட்டியிடுகின்றனர். அதேபோல, ஜெயலலிதாவின் அண்ணன் மகள் தீபாவும் போட்டியிடப் போவதாகக் கூறி வருகிறார். இது தவிர, பல்வேறு சுயேட்சை வேட்பாளர்களும் போட்டியிடுகின்றனர்.

இந்நிலையில்,  ஆர்.கே.நகர் இடைத்தேர்தலில் நாம் தமிழர் கட்சி  வேட்பாளராக, கலைக்கோட்டு உதயம் அறிவிக்கப்பட உள்ளார். இவர் தமிழன் தொலைக் காட்சியின் அதிபர் ஆவார். இதற்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பை அக்கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் சற்று நேரத்தில் அறிவிக்க உள்ளார்.

Stay Updated with Tamil Flash News - Facebook's 'FbStart' Tamil APP

தமிழ்நாடு சார்ந்த செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள... தமிழ் ஃப்ளாஷ் நியூஸ் அப்ளிகேஷன்! ஃபேஸ்புக்குக்கே பிடித்த நம்பர் 1 தமிழ் நியூஸ் ஆப்... Tamil Flash News..!

பதிவிறக்க... க்ளிக் http://bit.ly/FreeTFN

Advertisement
Advertisement
Advertisement
Advertisement
Advertisement

எடிட்டர் சாய்ஸ்

வெறும் ஆறே ரன்கள்.. போட்டியில் தோல்வி! ஆனாலும் அனைவரின் மனதையும் நெகிழவைத்த அந்த கிரிக்கெட் மேட்ச்! #MustRead #MondayMotivation
Advertisement

MUST READ

Advertisement
[X] Close