Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

[X] Close

'நான் சீன் போடவில்லை'!- பேரவையில் பன்னீர்செல்வத்தைச் சீண்டிய அமைச்சர் ஜெயக்குமார்!

''ஓ.பன்னீர்செல்வத்தைப் போன்று நான் சீன் போடவில்லை'' என்று அமைச்சர் ஜெயக்குமார் சட்டப்பேரவையில் பேசியதற்கு, பன்னீர்செல்வம் அணி எம்எல்ஏ-க்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர்.

தமிழக சட்டப்பேரவையில் இன்று ரூபெல்லா, தட்டம்மை குறித்து தி.மு.க உறுப்பினர் பூங்கோதை கவனஈர்ப்புத் தீர்மானம் கொண்டு வந்தார். இதற்கு, சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் பதில் அளித்துப் பேசினார். இதையடுத்து, முத்துக்கிருஷ்ணன் மரணம், ஹைட்ரோ கார்பன் திட்டம் குறித்து விவாதிக்க அனுமதிக்க வேண்டும் என்று கவனஈர்ப்புத் தீர்மானம் கொண்டுவந்தார், எதிர்க்கட்சித் தலைவர் மு.க.ஸ்டாலின். இதற்குப் பதில் அளித்த சபாநாயகர் தனபால், தி.மு.க-வின் கவன ஈர்ப்புத் தீர்மானங்கள், நாளை அவையில் எடுத்துக்கொள்ளப்படும் என்றார்.

பின்னர், மு.க.ஸ்டாலின் பேசுகையில்... ஜெயலலிதா சமாதியில் அஞ்சலி செலுத்துவதை நான் தவறாக நினைக்கவில்லை. ஆனால், அரசின் நிதிநிலை அறிக்கையை ஜெயலலிதா சமாதியில் வைத்து அஞ்சலி செலுத்தியது தவறு என்றார். அப்போது, அ.தி.மு.க உறுப்பினர்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்து அமளியில் ஈடுபட்டனர். பதிலுக்கு, தி.மு.க உறுப்பினர்களும் கடும் அமளியில் ஈடுபட்டனர். அப்போது பேசிய அமைச்சர் ஜெயக்குமார், 1989-ம் ஆண்டு பட்ஜெட் உரை கசிந்ததால்தான், தி.மு.க ஆட்சியே கலைந்தது என்றார். இதற்கு எதிர்ப்பு தெரிவித்த மு.க.ஸ்டாலின், அதற்கான ஆதாரத்தை அமைச்சர் காட்ட வேண்டும் என்று வலியுறுத்தினார்.

அப்போது பேசிய அமைச்சர் ஜெயக்குமார், ஓ.பன்னீர்செல்வம் போன்று நான் சீன் போடவில்லை என்றார். அமைச்சரின் இந்தப் பேச்சுக்கு பன்னீர்செல்வம் அணி எம்எல்ஏ-க்கள் செம்மலை, மாணிக்கம் உள்ளிட்டவர்கள் எதிர்ப்பு தெரிவித்தனர். இதனால், சட்டப்பேரவையில் சிறிது நேரம் சலசலப்பு ஏற்பட்டது.

Stay Updated with Tamil Flash News - Facebook's 'FbStart' Tamil APP

தமிழ்நாடு சார்ந்த செய்திகளை உடனுக்குடன் தமிழ் ஃப்ளாஷ் நியூஸ் அப்ளிகேஷனில் தெரிந்துகொள்ளலாம். இதுதான் நம்பர் ஒன் தமிழ் நியூஸ் ஆப்!

பயன்படுத்த க்ளிக் http://bit.ly/FreeTFN

Advertisement
Advertisement
Advertisement
Advertisement
Advertisement

எடிட்டர் சாய்ஸ்

Advertisement

MUST READ

Advertisement
[X] Close