Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

[X] Close

சென்னை போலீஸ் கமிஷனர் ஜார்ஜை விளாசிய நீதிபதி கிருபாகரன்!

வழக்கில் ஆஜராகச் சொன்னால், விலக்கு பெறும் சென்னை காவல்துறை ஆணையர் ஜார்ஜை எப்படி நம்புவது? எனக் கூறிய சென்னை உயர்நீதிமன்ற நீதிபதி கிருபாகரன், நீதிமன்றமே தாமாக முன்வந்து ஜார்ஜ் மீது வழக்குப்பதிவு செய்ய முடியும் என்று எச்சரித்துள்ளார்.

புகையிலைப் பொருள்களைத் தடைசெய்ய, சென்னை மாநகரக் காவல்துறை ஆணையர் ஜார்ஜுக்கு உத்தரவிட வேண்டும் என்று கோரி, தங்கவேலு என்பவர் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்குத் தொடர்ந்துள்ளார். இந்த வழக்கில், சென்னை மாநகர காவல்துறை ஆணையர் ஜார்ஜ், நேரில் ஆஜராக வேண்டும் என்று உயர்நீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது. அரசு தரப்பில், காவல்துறை ஆணையர் மார்ச் 22-ம் தேதி ஆஜராவார் என்று உத்தரவாதம் அளித்தது.

வழக்கு, நீதிபதி கிருபாகரன் முன்பு இன்று விசாரணைக்கு வந்தது. அப்போது, காவல்துறை ஆணையர் ஜார்ஜ் ஆஜராகாததற்கு கடும் கண்டனம் தெரிவித்த நீதிபதி, ஜார்ஜ் ஆஜராவார் என்ற உத்தரவாதத்தை நிறைவேற்றாதது ஏன் என்று அரசு தலைமைக் கூடுதல் வழக்கறிஞர் வெங்கட்ரமணியிடம் கேள்வி எழுப்பினார்.

மேலும் நீதிபதி, மார்ச் 22-ம் தேதி ஜார்ஜ் ஆஜராவார் என்று உத்தரவாதம் அளித்தீர்கள். பின்னர் தலைமை நீதிபதி அமர்வில் மேல்முறையீடு செய்துள்ளீர்கள். ஜார்ஜுக்குப் பதில், உயரதிகாரிகள் பலர் ஆஜராவதால் செலவு அதிகமாகிறது. ஒருவருக்குப் பதில் பிறர் ஆஜராவதால், மக்களின் வரிப்பணம் வீணாக்கப்படுகிறது. வழக்கில் ஆஜராகச் சொன்னால், விலக்கு பெறும் சென்னை காவல்துறை ஆணையர் ஜார்ஜை எப்படி நம்புவது? நீதிமன்றமே தாமாக முன்வந்து ஜார்ஜ் மீது வழக்குப்பதிவு செய்ய முடியும் என்று எச்சரித்தார்.

Advertisement
Advertisement
Advertisement
Advertisement
Advertisement

எடிட்டர் சாய்ஸ்

Advertisement

MUST READ

Advertisement
[X] Close