Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

[X] Close

சசிகலாவுக்கு எதிராக உச்சநீதிமன்றத்தில் புதிய வழக்கு!

அ.தி.மு.க பொதுச்செயலாளர் பதவியில் சசிகலா நீடிக்கக் கூடாது; அவரை கட்சிப் பதவியில் இருந்து நீக்க வேண்டும் என்று சட்டப் பஞ்சாயத்து இயக்கம், உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளது. 

Sasikala
 

ஜெயலலிதா மறைந்த பிறகு, கடந்த ஆண்டு டிசம்பர் 29-ம் தேதி அ.தி.மு.க பொதுச் செயலாளராக சசிகலா நியமிக்கப்பட்டார். அ.தி.மு.க. பொதுக்குழு கூட்டத்தில் பெரும்பான்மையான உறுப்பினர்களின் சம்மதத்துடன்  நியமனம் செய்யப்பட்டதாக அறிவிக்கப்பட்டது. அதுமட்டுமின்றி கடந்த பிப்ரவரி 5-ம் தேதி அ.தி.மு.க.வின் சட்டமன்ற உறுப்பினர்களின் தலைவராகவும் சசிகலா தேர்ந்தெடுக்கப்பட்டார். ஆனால், பிப்ரவரி 14-ம் தேதி சொத்துக்குவிப்பு மேல்முறையீட்டு வழக்கில் சசிகலா குற்றவாளி என அறிவிக்கப்பட்டார்.  
சசிகலா, இளவரசி, சுதாகரன் ஆகியோருக்கு நான்கு வருட சிறைத்தண்டனை மற்றும் 10 கோடி ரூபாய் அபராதம் விதித்து உச்சநீதிமன்றம் தீர்ப்பளித்தது. பிப்ரவரி 15-ம் தேதி பெங்களூரு பரப்பன அக்ரஹாரா சிறை வளாக நீதிமன்றத்தில் சரணடைந்த சசிகலா, இளவரசி, சுதாகரன் ஆகிய மூவரும் சிறையில் அடைக்கப்பட்டனர். 

இதனைத் தொடர்ந்து, சசிகலாவின் பொதுச்செயலாளர் பதவி செல்லாது என பலத் தரப்பில் இருந்து குரல் எழுந்தது. ஓ.பன்னீர்செல்வம் அணியினர் சசிகலா பொதுச்செயலாளராக நியமிக்கப்பட்டது அ.தி.மு.க சட்ட விதிகளின் படி செல்லாது என தேர்தல் ஆணையத்தில் புகார் அளித்தனர். இந்த புகார் மனு விசாரிக்கப்பட்டு வரும் நிலையில் சசிகலாவின் பதவிக்கு எதிராக சட்டப்பஞ்சாயத்து இயக்கமும் தேர்தல் ஆணையத்தில் நேற்று  மனு கொடுத்தது.

சட்டப் பஞ்சாயத்தின் மனுவில், ஊழல் வழக்கில் தண்டிக்கப்பட்ட சசிகலா ஒரு கட்சியை நிர்வகிக்கும் பதவியில் இருக்கிறார். கட்சி வேட்பாளர்களுக்கான படிவங்களில் கையெழுத்து போடும் அதிகாரத்தில் தொடர்ந்து நீடிக்கிறார். அ.தி.மு.க பொதுச்செயலாளராக பதவி வகிக்க தகுதியற்றவரான சசிகலாவின் பதவி பறிக்கப்பட வேண்டும்’ என்று குறிப்பிடப்பட்டுள்ளது. 

இந்தநிலையில், குற்றவாளி என அறிவிக்கப்பட்ட சசிகலா, ஆளும் கட்சியில் முக்கியப் பதவியில் உள்ளார். சசிகலா பொதுச்செயலாளர் பதவியில் நீடிக்கக் கூடாது. அவரை கட்சிப் பதவியில் இருந்து நீக்க வேண்டும் என்று சட்டப் பஞ்சாயத்து இயக்கம், உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளது. 

உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்

Advertisement
Advertisement
Advertisement

எடிட்டர் சாய்ஸ்

Advertisement

MUST READ

Advertisement
[X] Close