Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

[X] Close

ஓய்வுபெற்ற போக்குவரத்து ஊழியர்களின் போராட்டத்துக்கு கிடைத்த பலன்!

ஓய்வுபெற்ற போக்குவரத்துத் தொழிலாளர்களுக்கு ஓய்வூதியத் தொகையை வழங்க தமிழக அரசுக்கு உயர்நீதிமன்ற மதுரை கிளை இடைக்கால உத்தரவு பிறப்பித்துள்ளது. 

தமிழக போக்குவரத்துக் கழகங்களின் கீழ் சுமார்  65,000 ஓய்வூதியர்கள் உள்ளனர். இவர்களுக்கான ஓய்வூதியத் தொகை  கடந்தாண்டு டிசம்பர் முதல் இரு தவணைகளாக வழங்கப்பட்டு வருகிறது. ஒவ்வொரு மாதமும் ஒவ்வொரு தேதியில் பென்ஷன் தொகை விநியோகிக்கப்படுகிறது. ஓய்வூதியத்  தொகை முறையாக விநியோகிக்கப்படாததைக் கண்டித்து, அரசு போக்குவரத்துக்கழக ஓய்வூதியர்கள் தமிழகம் முழுவதும் தொடர் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். 

இந்நிலையில், போக்குவரத்துத் துறையில் பணியாற்றி ஓய்வு பெற்ற தொழிலாளர்களுக்கு ஒவ்வொரு மாதமும் முறையாக ஓய்வூதியம் வழங்கப்படுவதில்லை. இதனை முறையாக வழங்க தமிழக அரசுக்கு உத்தரவிட வேண்டும் என்று கோரி ஓய்வுபெற்ற ஊழியர் கிருஷ்ணன் உள்ளிட்ட 8 பேர் உயர்நீதிமன்ற மதுரைக் கிளையில் வழக்குத் தொடர்ந்தனர்.

இந்த வழக்கு உயர்நீதிமன்ற கிளையில் இன்று விசாரணைக்கு வந்தது. அப்போது, ஓய்வுபெற்ற போக்குவரத்து ஊழியர்களுக்கு உடனடியாக ஓய்வூதியம் வழங்க வேண்டும். ஒவ்வொரு மாதமும் குறித்த தேதியில் ஓய்வூதியம் வழங்கவேண்டும் என்று தமிழக அரசுக்கு உத்தரவிட்ட உயர்நீதிமன்றம், வழக்கு விசாரணையை ஏப்ரல் 12-ம் தேதிக்கு ஒத்திவைத்தது.

உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்

Advertisement
Advertisement
Advertisement

எடிட்டர் சாய்ஸ்

Advertisement

MUST READ

Advertisement
[X] Close