Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

[X] Close

மத்தியப்படை பாதுகாப்பு கேட்கும் பன்னீர்செல்வம், மதுசூதனன்!

முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் மற்றும் ஆர்.கே.நகர் வேட்பாளர் மதுசூதனன் ஆகியோருக்கு மத்தியப்படை பாதுகாப்பு கேட்டு உள்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங்கிடம் கோரிக்கை மனு அளிக்கப்பட்டுள்ளது.

ஜெயலலிதா மறைவுக்குப் பிறகு அ.தி.மு.க மூன்றாக உடைந்தது. சசிகலா தலைமையில் ஓர் அணியும், முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் தலைமையில் ஓர் அணியும், ஜெயலலிதா அண்ணன் மகள் தீபா தலைமையில் ஓர் அணியும் பிரிந்தது. இந்தநிலையில், சசிகலா அணி சார்பில் டி.டி.வி.தினகரனும், ஓ.பன்னீர்செல்வம் அணி சார்பில் மதுசூதனனும் ஆர்.கே.நகர் தொகுதி இடைத்தேர்தலில் போட்டியிடுகின்றனர். தீபா போட்டியிடப்போவதாக அறிவித்துள்ளார்.

வேட்புமனு தாக்கல் வரும் 23-ம் தேதி தேதியுடன் முடிவடைகிறது. டி.டி.வி.தினகரன் நாளை வேட்புமனு தாக்கல் செய்ய உள்ளார். இதைத் தொடர்ந்து அவர் பிரசாரம் மேற்கொள்கிறார். மதுசூதனன் இதுவரை வேட்புமனு தாக்கல் செய்யவில்லை. வேட்பாளராக அறிவிக்கப்பட்ட பிறகு மதுசூதனனுக்கு கொலை மிரட்டல்கள் வருகின்றன.

இந்தநிலையில், டெல்லியில் மத்திய உள்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங்கை பன்னீர்செல்வம் அணியை சேர்ந்த மைத்ரேயன் தலைமையில் ஆதரவு எம்.பி.க்கள் இன்று திடீரென சந்தித்தனர். அப்போது, முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் மற்றும் ஆர்.கே.நகர் வேட்பாளர் மதுசூதனன் ஆகியோருக்கு மத்தியப்படை பாதுகாப்பு வழங்க வேண்டும் என்று கோரிக்கை மனு ஒன்றை அளித்தனர்.

முன்னதாக, ஆர்.கே.நகர் தேர்தல் முடியும் வரை துப்பாக்கி ஏந்திய போலீஸ் பாதுகாப்பு வழங்கக்கோரி பன்னீர்செல்வம் அணியின் வேட்பாளர் மதுசூதனன், சென்னை டி.ஜி.பி. அலுவலகத்தில் இன்று மனு அளித்தார். இந்த மனுவை மதுசூதனன் தரப்பு வழக்கறிஞர்கள் வழங்கினர்.

Advertisement
Advertisement
Advertisement

எடிட்டர் சாய்ஸ்

Advertisement

MUST READ

Advertisement
[X] Close