Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

[X] Close

டி.டி.வி.தினகரனை ஆதரிப்பது ஏன்? சரத்குமார் சொல்லும் அடடே விளக்கம்!

சமத்துவ மக்கள் கட்சித் தலைவர் சரத்குமார், ஆர்.கே.நகர் தேர்தலில் டி.டி.வி.தினகரனை ஆதரித்துள்ளார். இதுகுறித்து சரத்குமார் நிருபர்களிடம் கூறுகையில், ' ''தேர்தலில் தனித்துவம் பெற வேண்டும் என்று எங்கள் கட்சியின் துணைப் பொதுச் செயலாளர் சேவியரை வேட்பாளராக நிறுத்தினோம். சில பிழைகளின் காரணமாக அவரது வேட்புமனு நிராகரிக்கப்பட்டது. தொடர்ந்து ஏழு ஆண்டு காலம் அ.தி.மு.க-வுக்கு உறுதுணையாக இருந்து செயலாற்றினோம். இப்போதை சூழ்நிலையில், எங்கள் இயக்க முன்னோடிகளுடன் கலந்துபேசி,  டி.டி.வி.தினகரனை ஆதரித்துள்ளோம். 


'இரண்டு பேர் பிரிந்துவிட்டால் நடுவில் புகுந்துவிடலாம்' என்று நினைக்கிறவர்களின் கனவை உடைக்க வேண்டும். எம்.ஜி.ஆர் தொடங்கிய இயக்கம், ஜெயலலிதா வழிநடத்திய இயக்கம் சிறப்பாக இருக்க வேண்டும். நாம் அனைவரும் ஒன்றுபட்டால்தான் மக்களை சிறப்பாக வழிநடத்த முடியும். ஆகவே, நாங்கள் ஆதரவு தெரிவித்துள்ளோம். 7-ம் தேதியில் இருந்து பிரசாரத்தைத் தொடங்குகிறேன். டி.டி.வி.தினகரன் 50 ஆயிரம் வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றிபெறுவார்.


சில நாட்களுக்கு முன்பு, நான் ஓ.பன்னீர்செல்வத்தைச் சந்தித்தபோது, அவருடைய எண்ணங்களுக்கு வெற்றி கிடைக்கட்டும் என்று சொல்லியிருந்தேன். ஒரே இயக்கத்தில் இருப்பவர்கள்தான் பிரிந்திருக்கிறார்கள். அவர்கள் ஒன்றுசேர வேண்டும். இந்த ஐந்து ஆண்டு காலம், ஒரு நிரந்தர ஆட்சி, தீர்க்கமான ஆட்சி இருக்க வேண்டும். ஐந்து ஆண்டுகளுக்கு ஒரு முறைதான் தேர்தல் வரவேண்டும். இடையில் பிரித்துவிடலாம் என நினைப்பது மக்களுக்கு நல்லதல்ல. ஓ.பன்னீர் செல்வம் மீது எந்த வருத்தமும் எனக்கு கிடையாது.


தொடர்ந்து நல்லாட்சி நடக்க வேண்டும். எந்தவொரு சூழ்நிலையிலும் ஆட்சியைக் கலைத்துவிடக்கூடாது என்பதே என் எண்ணம். எனவே, டி.டி.வி.தினரகனை சமத்துவ மக்கள் கட்சி ஆதரிக்கிறது. அ.தி.மு.க-வில் சிறு மனஸ்தாபங்கள் இருக்கலாம். எல்லோரும் அமர்ந்து பேசி, நல்ல முடிவு எடுக்கலாம். சேர்ந்து பணியாற்றலாம். எம்.ஜி.ஆர். ஆசீர்வாதத்தோடு, ஜெயலலிதா ஆசீர்வாதத்தோடு அது நடக்கலாம். அதற்கான வாய்ப்பு இருக்கிறது." என்றார் சரத்குமார்.

-எஸ்.முத்துகிருஷ்ணன்

Advertisement
Advertisement
Advertisement

எடிட்டர் சாய்ஸ்

“மாட்டின் மீதான அக்கறை, சிசுக்கள் மீது கிடையாதா?!” நெஞ்சு பொறுக்குதில்லையே #GorakhpurTragedy
Advertisement

MUST READ

Advertisement
[X] Close