Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

[X] Close

அமைச்சர் விஜயபாஸ்கர் மற்றும் சரத்குமாருக்கு சம்மன் : வருமான வரித்துறை அதிரடி!

அமைச்சர் விஜயபாஸ்கர், நடிகர் சரத்குமார், கீதாலட்சுமி உள்ளிட்டோர் நாளை நேரில் ஆஜராக வேண்டும் என்று வருமான வரித்துறை சம்மன் அனுப்பி உள்ளது. 

Vijay Bhaskar, Sarath kumar
 

தமிழக சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் மற்றும் தமிழ்நாடு எம்.ஜி.ஆர் மருத்துவ பல்கலைக்கழக துணைவேந்தர் கீதாலட்சுமி ஆகியோரின் வீடுகளில் வருமான வரித்துறை அதிகாரிகள் கடந்த 7-ம் தேதி அதிரடி சோதனை நடத்தினர். மேலும், அ.தி.மு.கவை சேர்ந்த சிட்லபாக்கம் ராஜேந்திரன் மற்றும் சேப்பாக்கத்தில் உள்ள எம்.எல்.ஏ.க்கள் விடுதிகளிலும் சோதனை நடைபெற்றது. சமத்துவ மக்கள் கட்சித் தலைவர் சரத்குமார் வீட்டிலும் வருமானவரித்துறையினர் சோதனை மேற்கொண்டனர்.

விஜயபாஸ்கர் வீட்டில் சிக்கிய ஆவணங்கள் குறித்து வருமான வரித்துறை அளித்த விளக்கத்தில், “ஆர்.கே.நகரில் பணப்பட்டுவாடா செய்ததற்கான ஆதாரங்கள் விஜயபாஸ்கர் அறையில் சிக்கியுள்ளது.சேப்பாக்கம் எம்எல்ஏ விடுதியில் உள்ள விஜயபாஸ்கர் அறையில் வாக்காளர் பட்டியல் கைப்பற்றப்பட்டது. எழும்பூரில் உள்ள தனியார் விடுதியிலும் வாக்காளர் பட்டியல் பறிமுதல் செய்யப்பட்டது. வாக்காளர் பட்டியலை வைத்து பணம் தந்ததற்கான ஆதாரங்களும் சிக்கின தமிழகத்தில் 50 இடங்களில் நடந்த சோதனையில் 4.50 கோடி ரூபாய் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.விஜயபாஸ்கர் உதவியாளர் நயினார் முகமது வீட்டில் 3.5 கோடி ரூபாய் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. மற்றொரு உதவியாளர் கல்பேஷ் வீட்டில் இருந்து ஒரு கோடி ரூபாய் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது" என்று கூறியுள்ளது.

இந்நிலையில் விஜயபாஸ்கர், நடிகர் சரத்குமார், கீதாலட்சுமி ஆகியோர் நாளை நேரில் ஆஜராக வேண்டும் என்று வருமான வரித்துறை சம்மன் அனுப்பி உள்ளது.
 

Stay Updated with Tamil Flash News - Facebook's 'FbStart' Tamil APP

தமிழ்நாடு சார்ந்த செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள... தமிழ் ஃப்ளாஷ் நியூஸ் அப்ளிகேஷன்! ஃபேஸ்புக்குக்கே பிடித்த நம்பர் 1 தமிழ் நியூஸ் ஆப்... Tamil Flash News..!

பதிவிறக்க... க்ளிக் http://bit.ly/FreeTFN

Advertisement
Advertisement
Advertisement
Advertisement
Advertisement

எடிட்டர் சாய்ஸ்

வெறும் ஆறே ரன்கள்.. போட்டியில் தோல்வி! ஆனாலும் அனைவரின் மனதையும் நெகிழவைத்த அந்த கிரிக்கெட் மேட்ச்! #MustRead #MondayMotivation
Advertisement

MUST READ

Advertisement
[X] Close