Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

[X] Close

தினம் 25,000 சப்பாத்திகள்... 40 பெண்கள்... அசத்தும் மகளிர் குழுக்கள்!

சப்பாத்தி தயாரிக்கும் மகளிர் சுய உதவிக்குழுப் பெண்கள்

தினம் 25,000 சப்பாத்திகள், 40 பெண்கள் என அசத்துகிறார்கள் கிருஷ்ணகிரி மாவட்டத்தைச் சேர்ந்த சுய உதவிக்குழுப் பெண்கள்.

ஏழு மகளிர் சுய உதவிக் குழுவைச் சேர்ந்த 90 பெண்கள், கிருஷ்ணகிரி மாவட்டம் ஒசூரை அடுத்த கொத்தகொண்டப்பள்ளியில் செயல்பட்டுவரும் டி.வி.எஸ் நிறுவனத்திலும், அதே நிறுவனத்தின் ஜலகண்டப்பள்ளி கிளையிலும் சப்பாத்தி தயாரிக்கும் தொழிலில் ஈடுபட்டுள்ளனர். அவர்களில் சிவசக்தி என்ற மகளிர் குழுவின் தலைவர் லட்சுமி உற்சாகமாகப் பேசுகிறார்....

"கொத்தகொண்டப்பள்ளியில இயங்கிவரும் டி.வி.எஸ் நிறுவனத்துல சிவசக்தி, புவனேஸ்வரி, கோகுல லட்சுமி, ஓம்சக்தி, மாரியம்மன், திருவேணின்னு ஆறு மகளிர் சுயஉதவிக் குழுப் பெண்கள் 70 பேர் சப்பாத்தி தயாரிக்கும் வேலையைச் செய்றோம். பத்து வருஷத்துக்கு முன்னாடி சரியான வேலை வாய்ப்பு இல்லாம இதே ஊரைச் சேர்ந்த நாங்க சிரமப்பட்டுகிட்டு இருந்தோம். அப்போதான் டி.வி.எஸ் நிறுவனத்துக்கு சப்பாத்தி தயாரிச்சுக் கொடுக்க ஆட்கள் தேவைப்பட்டாங்க.

சப்பாத்தி தயாரிப்பில் மகளிர் சுய உதவிக்குழுப் பெண்கள்

ஆரம்பத்துல ஒரு நிறுவனத்துக்கு போய் வேலை செய்ய எங்களுக்கு ரொம்பவே தயக்கமா இருந்துச்சு. ஆனாலும் டி.வி.எஸ்lakshmi நிறுவனத்துக்காரங்க எங்களுக்கு ஊக்கமும், பயிற்சியும் கொடுத்தாங்க. தொடர்ந்து வேலை செஞ்சோம். அந்நிறுவனத்தோட அணுகுமுறையும், எங்க வேலைத்திறனும் ரெண்டு தரப்புக்கும் ரொம்பவே பிடிச்சுப்போக பத்து வருஷம் கடந்தும் நாங்க உற்சாகமா வேலை செஞ்சுகிட்டு இருக்கிறோம். ஒரு நாளைக்கு ரெண்டு குழுவைச் சேர்ந்த 25 பெண்கள்னு மாறிமாறி வேலைக்கு வருவோம். அப்படி கொத்தகொண்டப்பள்ளி நிறுவனத்துல மட்டும் ஒரு நாளைக்கு, 15 ஆயிரம் சப்பாத்திகளை நாங்க தயாரிக்கிறோம். அதுல, இந்நிறுவனக்குத் தேவைப்படும் 12 ஆயிரம் சப்பாத்திகள் போக மீதமிருக்கும் சப்பாத்திகளை, பக்கத்துல இருக்குற நிறுவனங்களுக்கு விற்பனை செஞ்சுடுவோம். எங்க டீம்ல உள்ள ஒரு பெண் மட்டும் ஒரு நாளைக்கு, தலா 30 கிராம் அளவுல சரியான வட்ட வடிமைப்புல சப்பாத்திகளை தயாரிக்கணும்.

டி.வி.எஸ் நிறுவனத்தோட ஜலகண்டப்பள்ளி பிரான்ச் கொஞ்ச தொலைவுல இருக்கு. அங்க அந்த ஊரைச் சேர்ந்த மாரியம்மன் மகளிர் சுயஉதவிக் குழுவைச் சேர்ந்த 15 பெண்கள், ஒரு நாளைக்கு 10 ஆயிரம் சப்பாத்திகளை தயார் செய்றாங்க. அந்த நிறுவனத்தோட தேவைகள் போக மீதம் இருக்கிறதை வெளியில வித்திடுவாங்க. இப்படி ரெண்டு ஊர்லயும் ஒரு நாளைக்கு  40 பெண்கள் வேலை செஞ்சு, சுமார் 25 ஆயிரம் சப்பாத்திகளை தயாரிக்கிறோம்" என புன்னகைக்கிறார், லட்சுமி.

சப்பாத்தி தயாரிப்பில் மகளிர் சுய உதவிக் குழுப் பெண்கள்

டி.வி.எஸ் நிறுவனத்தின் ஃபீல்டு டைரக்டரான துரையன், "ஆரம்பத்துல சரியான வேலை வாய்ப்பு இல்லாம, பிள்ளைங்களை சரியா படிக்க வைக்க முடியாம சிரமப்பட்டுட்டு இருந்தடிவிஎஸ் நிறுவன ஃபீல்டு இயக்குநர் துரையன் கொத்தகொண்டப்பள்ளி, ஜலகண்டப்பள்ளி கிராமத்தைச் சேர்ந்த மகளிர் சுயஉதவிக் குழுப் பெண்களுக்கு சப்பாத்தி தயாரிக்குற வேலையைக் கொடுத்தோம். ஆரம்பத்துல இருந்து இப்போ வரைக்கும் அப்பெண்களுடைய வேலை திறன் அதிகமாகிட்டே இருக்குற நிலையில, சுகாதாரமான முறையிலும், சிறப்பான தரத்துடனும் இருக்கு. சப்பாத்தி தயாரிக்கத் தேவையான மூலப்பொருட்களை நாங்களே மொத்தமா பெங்களூர்ல இருந்து வாங்கிட்டுவந்து கொடுத்துடுவோம். அதுக்கான தொகையை கொடுத்திடுவாங்க. தயாரிக்குற சப்பாத்தி ஒன்றுக்கு ரு. 1.95 பைசாங்கிற விலைக்கு எங்களுக்கு விற்பனை செஞ்சுடுவாங்க.

குறிப்பா கொத்தகொண்டப்பள்ளி நிறுவனத்துல ஒரு நபர்க்கு மாசத்துல எட்டு நாள்தான் வேலை இருக்கும். அந்த எட்டு நாள்லயே, ஒரு ஆள் ஆராயிரம் ரூபாய் வரைக்கும் சம்பாதிக்கிறாங்க. மற்ற நாட்கள்ல அவங்க வீட்டுல இருந்தபடியே கால்நடை வளர்ப்பு, பெட்டிக்கடை நடத்துறதுன்னு மற்ற வேலைகளை செய்றாங்க. அதுக்கான உதவிகளையும் நாங்க செய்து கொடுத்திருக்கோம். ஜலகண்டப்பள்ளி பிரான்ச் நிறுவனத்துல வேலை செய்ற எல்லாருக்கும் மாசம் முழுக்க எல்லா நாளுமே வேலை இருக்கும். இதனால ஏழு மகளிர் சுயஉதவிக் குழுப் பெண்களுக்கும் நிலையான வேலை வாய்ப்புக் கிடைக்குது. அதனாலயே இப்போ அவங்களோட பொருளாதார நிலை முன்பைக் காட்டிலும் ரொம்பவே மேன்மையடைஞ்சு இருக்கு. பத்து வருஷத்துக்கு முன்னாடி குடிசை வீட்டுல இருந்த இந்த மகளிர் குழுப் பெண்கள்ல, இப்போ 43 பேர் புது வீடுகளை கட்டியிருக்காங்க. கூடவே பெம்பாலான பெண்கள் சொந்தமா டூ வீலர் வாங்கி, அதுலதான் தினமும் வேலைக்கு வர்றாங்க. இவங்கள மாதிரியே வேலை வாய்ப்பில்லாத கிராமப்புறப் பெண்கள் கூட்டு முயற்சியோடு, தொழில் செஞ்சா நிச்சயமா மேன்மையான நிலைக்கு வர முடியும்" என உற்சாகமாகப் பேசுகிறார் துரையன்.

கு.ஆனந்தராஜ்

Advertisement
Advertisement
Advertisement
Advertisement
Advertisement

எடிட்டர் சாய்ஸ்

என்ன செய்தார்கள் தமிழ்நாட்டின் 39 எம்.பி-க்கள்? - முழுமையான பெர்ஃபாமன்ஸ் ரிப்போர்ட்
Advertisement

MUST READ

Advertisement
[X] Close