Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

[X] Close

ஆட்சிக்கு நெருக்கடி தர... மும்பைக்கு பறக்கிறது தி.மு.க குழு!

தி.மு.க-கவர்னர் சந்திப்பு

மிழகத்தில் அ.தி.மு.க-வின் ஆட்சிக்கு ஒருபுறம் மத்திய அரசு நெருக்கடி கொடுத்துவரும் நிலையில், தி.மு.க-வும் தன் பங்குக்கு ஆட்சியை ஆட்டம் காணவைக்கும் திட்டத்தில் இறங்கியுள்ளது. 

தமிழகத்தின் ஆட்சி  தங்கள் கண் அசைவில் இருக்கவேண்டும் என்ற மனநிலையில் மத்திய அரசு உள்ளது. அதற்கான அடித்தளங்களை ஒவ்வொன்றாக செய்யத் தொடங்கி உள்ளனர். "விஜயபாஸ்கர் மீது வருமானவரி அதிகாரிகள் சோதனை என்ற அஸ்திரத்தை ஏவியது முதல், ஆர்.கே. நகர் தேர்தல் வரை எங்களுக்கு மறைமுகமாக மத்திய அரசு சொல்லும் சேதி இதுதான்” என்கிறார் தினகரனுக்கு ஆதரவான அ.தி.மு.க நிர்வாகி ஒருவர். 

மத்திய அரசின் நோக்கத்தைப் புரிந்த கொண்ட தமிழகத்தின் எதிர்கட்சியான தி.மு.க-வும் இந்தச் சூழ்நிலையைத் தங்களுக்குச் சாதகமாக மாற்றக் களம் கண்டுள்ளார்கள். ஆர்.கே.நகர் தேர்தலை நிறுத்தியதற்கு அடுக்கடுக்கான காரணங்களை தேர்தல் ஆணையம் வெளியிட்டது. அதில் முக்கிய குற்றச்சாட்டே ஆளுங்கட்சியின் அமைச்சரே வாக்காளர்களுக்கு பணம் கொடுக்க முயற்சித்துள்ளார் என்பதுதான். அதே போல் ஆட்சியில் இருக்கும் முதல்வர் உட்பட மேலும் ஏழு அமைச்சர்களும் இதற்குத் துணைபோய் உள்ளார்கள்”என்றும் தேர்தல் ஆணையம் குற்றம் சாட்டியுள்ளது. இந்தப் புகாரையே தங்களுக்குச் சாதகமாக மாற்ற, அதனை கையில் எடுத்துள்ளது தி.மு.க. 

தி.மு.க செயல்தலைவர் ஸ்டாலின் “வருமான வரித்துறை சோதனைக்குள்ளான அமைச்சர் விஜயபாஸ்கரை அமைச்சர் பதவியில் இருந்து நீக்க வேண்டும்” என ஏற்கெனவே சொல்லி வந்தார். துரைமுருகனோ “ஓட்டுக்கு பணம் கொடுத்த விவகாரத்தில் முதல்வர் உட்பட ஏழு அமைச்சர்கள் சம்மந்தபட்டிருப்பதாக ஆதாரம் வந்துள்ளது. எனவே சட்டசபையை முடக்கி இவர்கள் மீது விசாரணை நடத்த வேண்டும்” என்று கோரியிருந்தார். இதன்தொடர்ச்சியாக இதை ஒரு புகாராக கவர்னரிடம் தெரிவிக்க தி.மு.க தலைமை முடிவு செய்தது. 

கவர்னர்

கவர்னர் வித்யாசாகர ராவ் இப்போது மும்பையில் இருக்கிறார். அவர் தமிழகம் வரும்வரை காத்திருக்காமல் மும்பைக்கு சென்றே அவரைச் சந்திக்க தி.மு.க-வினர் முடிவு செய்தனர். தி.மு.க-வின் ராஜ்யசபா  எம்.பி-க்கள் மும்பையில் நாளை கவர்னர் வித்யாசாகர ராவை சந்திக்க உள்ளார்கள். அப்போது  “ஆட்சியில் இருக்கும் அமைச்சரின் வீட்டில் வருமான வரித்துறை சோதனை நடைபெற்றுள்ளது. அதே போல் ஆர்.கே.நகர் தேர்தலில் வாக்களார்களுக்குப் பணம் கொடுப்பதற்காக ஏழு அமைச்சர்கள் மற்றும் முதல்வர் தலைமையில் குழு அமைக்கப்பட்டிருப்பதற்கான ஆதாரங்களும் வெளியாகியுள்ளது. முதல்வரே வாக்களர்களுக்குப் பணம் கொடுக்கத் திட்டமிட்டது அரசியல் சாசனத்தை மீறிய செயல் என்பதால் அவர்கள் மீது நடவடிக்கை எடுக்கவேண்டும். அவர்களை அமைச்சரைவையில் இருந்து நீக்கிவிட்டு சி.பி.ஐ விசாரணை நடத்த உத்தரவிட வேண்டும்” என்று மனுவில் கூறயுள்ளார்கள். 

தமிழக ஆட்சியாளர்கள் மீது பி.ஜே.பி தரப்பில்  ஏற்கெனவே அதிருப்தியில் இருக்கும் நேரத்தில் எதிர்கட்சியின் கோரிக்கைக்கு செவிசாய்ப்பதுபோல் ஆளுங்கட்சி மீது அடுத்த அஸ்திரத்தை ஏவுவதற்கான வாய்ப்பாக இதை மத்திய அரசு பயன்படுத்திக் கொள்ளலாம் என்ற அச்சம் அ.தி.மு.க-வினர் மத்தியில் ஏற்பட்டுள்ளது. 

தமிழக அரசியலின் ஆடுபுலி ஆட்டம் அடுத்து மும்பையில் இருந்து தொடங்கலாம் என்கிறார்கள். 

-அ.சையது அபுதாஹிர்

Advertisement
Advertisement
Advertisement

எடிட்டர் சாய்ஸ்

Advertisement

MUST READ

Advertisement
[X] Close