Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

[X] Close

சரத்குமார் வீட்டில் வருமான வரித்துறை மீண்டும் அதிரடி ரெய்டு!

நடிகரும் சமத்துவ மக்கள் கட்சியின் தலைவருமான சரத்குமார் வீட்டில், வருமான வரித்துறையினர் மீண்டும் சோதனையில் ஈடுபட்டு வருகிறார்கள்.

sarath

கடந்த 7 -ம் தேதி, சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர், நடிகர் சரத்குமார் உள்ளிட்டோர் வீட்டில் வருமான வனத்துறையினர் சோதனை நடத்தினர். விஜயபாஸ்கரின் சொந்த ஊரிலும் சோதனை நடத்தப்பட்டது. இதையடுத்து சரத்குமார், விஜயபாஸ்கர், கீதாலட்சுமி உள்ளிட்டோருக்கு சம்மன் அனுப்பப்பட்டது. பல முக்கிய ஆவணங்கள் சிக்கியதாகவும் வருமானவரித்துறை தரப்பில் கூறப்பட்டது.

இதனிடையே, சென்னை தி.நகரில் உள்ள நடிகை ராதிகாவின் ராடன் நிறுவனத்திலும் வருமான வரித்துறையினர் இன்று சோதனை மேற்கொண்டனர். இந்நிலையில், நடிகர் சரத்குமார் வீட்டில் இன்று மீண்டும் வருமான வரித்துறையினர்  சோதனை மேற்கொண்டுள்ளனர். இதையடுத்து, சரத்குமாரின் கொட்டிவாக்கம் இல்லத்தின் வெளியே போலீஸ் குவிக்கப்பட்டுள்ளது.  

உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்

Advertisement
Advertisement
Advertisement
Advertisement

எடிட்டர் சாய்ஸ்

Advertisement

MUST READ

Advertisement
[X] Close