Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

[X] Close

சரத்குமார், ராதிகாவுக்கு சம்மன்! அதிரடி காட்டும் வருமான வரித்துறை

radhika

ரேடன் நிறுவனத்தில் நேற்று வருமான வரித்துறை சோதனை நடத்தியதை அடுத்து நடிகை ராதிகாவுக்கும், சரத்குமாருக்கும் வருமான வரித்துறை சம்மன் அனுப்பியுள்ளது. இன்று மாலை 3 மணிக்கு ஆஜராகும்படி வருமான வரித்துறை உத்தரவிட்டுள்ளது. 

அமைச்சர் விஜயபாஸ்கர் மற்றும் சமத்துவ மக்கள் கட்சித் தலைவர் சரத்குமார் ஆகியோரின் வீடு, அலுவலகங்களில் கடந்த 7-ம் தேதி வருமான வரித்துறையினர் சோதனை நடத்தினர். இந்தச் சோதனையின் போது பல கோடிக்கணக்கான பணம் மற்றும் ஆவணங்களை வருமான வரித்துறையினர் கைப்பற்றினர். இது தொடர்பாக விளக்கம் அளிக்கும்படி விஜயபாஸ்கர், சரத்குமார் ஆகியோருக்கு வருமான வரித்துறை சம்மன் அனுப்பியிருந்தது.

இதையடுத்து, சென்னை நுங்கம்பாக்கத்தில் உள்ள வருமான வரித்துறை அலுவலகத்தில் அவர்கள் நேரில் ஆஜராகினர். அவர்களிடம், நான்கு மணி நேரத்துக்கும் மேலாக விசாரணை நடத்தப்பட்டது.

இந்தச் சோதனையின் பரபரப்பு அடங்குவதற்குள், சரத்குமாரின் மனைவி ராதிகாவுக்குச் சொந்தமான ரேடன் மீடியா நிறுவனத்தில் நேற்று வருமான வரித்துறையினர் அதிரடியாக சோதனையில் ஈடுபட்டனர். இந்த சோதனை நடந்து கொண்டிருக்கும்போதே, கொட்டிவாக்கத்தில் உள்ள சரத்குமாரின் வீட்டிலும் வருமான வரித்துறையினர் சோதனை நடத்தினர். இந்நிலையில், நடிகை ராதிகாவுக்கு நேரில் ஆஜராகும்படி இன்று சம்மன் அனுப்பியுள்ளது வருமான வரித்துறை. இதேபோல் சரத்குமாருக்கும் சம்மன் அனுப்பப்பட்டுள்ளது. இரண்டு பேரும் இன்று மாலை 3 மணிக்கு சென்னை நுங்கம்பாக்கத்தில் உள்ள வருமான வரித்துறை அலுவலகத்தில் ஆஜராகி விளக்கம் அளிக்க வேண்டும் என்று கூறப்பட்டுள்ளது.

 

Stay Updated with Tamil Flash News - Facebook's 'FbStart' Tamil APP

தமிழ்நாடு சார்ந்த செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள... தமிழ் ஃப்ளாஷ் நியூஸ் அப்ளிகேஷன்! ஃபேஸ்புக்குக்கே பிடித்த நம்பர் 1 தமிழ் நியூஸ் ஆப்... Tamil Flash News..!

பதிவிறக்க... க்ளிக் http://bit.ly/FreeTFN

Advertisement
Advertisement
Advertisement
Advertisement
Advertisement

எடிட்டர் சாய்ஸ்

வெறும் ஆறே ரன்கள்.. போட்டியில் தோல்வி! ஆனாலும் அனைவரின் மனதையும் நெகிழவைத்த அந்த கிரிக்கெட் மேட்ச்! #MustRead #MondayMotivation
Advertisement

MUST READ

Advertisement
[X] Close