Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

[X] Close

மிரட்டப்பட்டாரா பெண் அதிகாரி..!? தமிழக அமைச்சர்கள் மீது அதிரடி புகார்

கடந்த 7-ம் தேதி தமிழக சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கரின் வீடு, அலுவலகம் மற்றும் உறவினர்கள் வீடுகளில் வருமானவரித்துறை சோதனை நடத்தப்பட்டது. விஜயபாஸ்கரின் வீட்டில் நடத்தப்பட்ட சோதனையின்போது பெண் வருமானவரித்துறை அதிகாரி மிரட்டப்பட்டதாக புகார் கூறப்பட்டுள்ளது.

kamaraj


வருமானவரித்துறை சோதனையின்போது பெண் அதிகாரியை மிரட்டியதாக தமிழக அமைச்சர்கள் காமராஜ் மற்றும் உடுமலை ராதாகிருஷ்ணன் மீது காவல்துறையில் புகார் அளிக்கப்பட்டுள்ளது. ஆதாரங்களை அழித்தல் உள்ளிட்ட பிரிவுகளில் வழக்குப்பதிய சென்னை காவல்துறை ஆணையருக்கு, வருமானவரித்துறை புலனாய்வுப் பிரிவு இயக்குநர் கடிதம் எழுதியுள்ளார். மேலும், தமிழக அரசுக்கான டெல்லி பிரதிநிதி தளவாய் சுந்தரத்தின் மீதும், அமைச்சர் கடம்பூர் ராஜூ மீதும் புகார் தரப்பட்டுள்ளது. உடனடி நடவடிக்கை எடுக்கக்கோரி கடிதம் எழுதியுள்ளார் வருமானவரித்துறை புலனாய்வு பிரிவு இயக்குநர்.

Advertisement
Advertisement
Advertisement

எடிட்டர் சாய்ஸ்

“மாட்டின் மீதான அக்கறை, சிசுக்கள் மீது கிடையாதா?!” நெஞ்சு பொறுக்குதில்லையே #GorakhpurTragedy
Advertisement

MUST READ

Advertisement
[X] Close