Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

[X] Close

சாமளாபுரத்தில் மதுக்கடைக்கு எதிரான போராட்டம் வாபஸ்

திருப்பூர் சாமளாபுரத்தில் காவல்துறையின் தடியடி தாக்குதல் நடவடிக்கையைக் கண்டித்து நடந்த போராட்டம் வாபஸ் பெறப்பட்டுள்ளது. கைது செய்யப்பட்ட 27 பேரும் விடுவிக்கப்பட்டதையடுத்து போராட்டம் வாபஸ் பெறப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

திருப்பூர் சாமளாபுரம் பகுதியில் புதிதாக மதுக்கடை அமைப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்து போராட்டத்தில் இறங்கிய மக்களை நேற்று காவல்துறை தடியடி நடத்தி விரட்டியது. இதில், ஏடிஎஸ்பி பாண்டியராஜன் பெண்களைத் தாக்கும் காட்சிகள் வெளியாகின. இதையடுத்து, பாண்டியராஜனின் செயலுக்கு அரசியல் கட்சிகள் மற்றும் பொதுமக்கள் தரப்பில் கண்டனம் தெரிவிக்கப்பட்டது. மேலும், பெண்களை தாக்கிய ஏடிஎஸ்பியை பணியிடை நீக்கம் செய்ய வலியுறுத்தி சாமளாபுரம் மக்கள் உண்ணாவிரத போராட்டத்தில் இறங்கினர்.

இந்நிலையில், மேற்கு மண்டல ஐ.ஜி பாரி இன்று பாண்டியராஜனிடம் விசாரணை நடத்தினார். இதையடுத்து, ஏடிஎஸ்பி பாண்டியராஜன் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என உறுதியளிக்கப்பட்டது. மேலும், மாவட்ட ஆட்சியர் ஜெயந்தி, சாமளாபுரம் பகுதியில் அந்த மதுக்கடை திறக்கப்படாது என போராட்டத்தில் ஈடுபட்டிருந்த மக்களிடம் உறுதியளித்தார். இதனிடையே, நேற்று கைது செய்யப்பட்ட 27 பேர் விடுவிக்கப்பட்டனர். இதையடுத்து, போராட்டம் வாபஸ் பெறப்படுவதாக ஊர் மக்கள் தரப்பில் கூறப்பட்டுள்ளது. தாக்குதலில் ஈடுபட்ட ஏடிஎஸ்பி பாண்டியராஜன் மீது நடவடிக்கை எடுக்கப்படாவிட்டால் மீண்டும் போராட்டத்தில் இறங்குவோம் என சாமளாபுரம் ஊர் மக்கள் கூறியுள்ளனர்.  
 

Advertisement
Advertisement
Advertisement
Advertisement
Advertisement

எடிட்டர் சாய்ஸ்

Advertisement

MUST READ

Advertisement
[X] Close