Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

[X] Close

ரயில் மறியல் போராட்டத்தில் ஈடுபட முயன்ற மாணவர்கள் கைது

சென்னையில் விவசாயிகளின் கோரிக்கைகளுக்காக ரயில் மறியலில் ஈடுபட முயன்ற தமிழ்நாடு மாணவர்-இளையோர் கூட்டமைப்பினர் கைது செய்யப்பட்டுள்ளனர். எழும்பூர் ரயில் நிலையத்தை நோக்கி அவர்கள் சென்றபோது கைது செய்துள்ளது காவல்துறை.

டெல்லியில் பல்வேறு கோரிக்கைகளை முன்வைத்து 30 நாட்களாக விவசாயிகள் போராடி வருகின்றனர். இவர்களுக்கு ஆதரவாக தமிழகம் முழுதும் பல்வேறு தரப்பினரும் போராட்டத்தில் ஈடுபட முயன்றனர். அண்மையில் சாஸ்திரி பவன் அருகே போராட்டத்தில் ஈடுபட்ட மாணவர்கள் காவல்துறையால் கைது செய்யப்பட்டனர். இந்நிலையில், தமிழ்நாடு மாணவர்-இளையோர் கூட்டமைப்பின் சார்பில் விவசாயிகளின் கோரிக்கைகளை ஆதரித்து இன்று எழும்பூர் ரயில் நிலையத்தின் முன்பு போராட்டம் நடத்தப்பட்டது. இதையடுத்து மத்திய அரசைக் கண்டித்து ரயில் மறியல் போராட்டத்தில் ஈடுபட முயன்ற அவர்களை காவல்துறை கைது செய்துள்ளது.

இதுகுறித்து மாணவர்களின் தரப்பில் கூறியதாவது, '30 நாள்களாக டெல்லியில் அறவழியில் போராடும் விவசாயிகளின் கோரிக்கைகளை மத்திய அரசு அலட்சியப்படுத்தி வருகிறது. இதனைக் கண்டிக்கும் வகையில் நாங்கள் ரயில் மறியல் போராட்டத்தில் ஈடுபடுகிறோம்' என கூறப்பட்டது. எனினும் ரயில்  நிலையத்துக்குள் நுழைய முயன்ற அவர்களை காவல்துறை கைது செய்துள்ளது.

கடந்த சில வாரங்களுக்கு முன்னர், விவசாயிகளின் கோரிக்கைகளை ஆதரித்து இவர்கள் கடலுக்குள் இறங்கி போராட முற்பட்ட பொது காவல்துறையினரால் கைது செய்யப்பட்டு பின்னர் விடுவிக்கப்பட்டனர் என்பது குறிப்பிடத்தக்கது.

உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்

Advertisement
Advertisement
Advertisement
Advertisement

எடிட்டர் சாய்ஸ்

Advertisement

MUST READ

Advertisement
[X] Close