Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

[X] Close

ரூ.4.97 கோடி வரி ஏய்ப்பு செய்துள்ளதாக ஒப்புக்கொண்ட சரத்குமார்-ராதிகா ..??

வருமானவரித்துறையின் விசாரணையில் வரி ஏய்ப்பு செய்துள்ளதாக நடிகர் சரத்குமாரும் ராதிகாவும் ஒப்புக்கொண்டுள்ளதாக கூறப்படுகிறது. வருமானவரித்துறையின் சோதனை அடிப்படையில் சுமார் 4.97 கோடி வரி ஏய்ப்பு செய்யப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

வருமானவரித்துறையினர் அமைச்சர் விஜயபாஸ்கர், நடிகர் சரத்குமார், எம்.ஜி.ஆர் மருத்துவப் பல்கலைக்கழகத் துணைவேந்தர் கீதாலட்சுமி உள்ளிட்டோரிடம் சோதனை நடத்தினர். இதில் பல முக்கிய ஆவணங்கள் சிக்கியதாக கூறப்பட்டது. மேலும் ராதிகாவின் ராடான் நிறுவனத்திலும் சோதனை நடத்தப்பட்டது. இதையடுத்து சரத்குமார்-ராதிகா இருவருக்கும் நேரில் ஆஜராக சம்மன் அனுப்பப்பட்டது.

இந்நிலையில் நுங்கம்பாக்கம் வருமான வரித்துறை அலுவலகத்தில் சரத்குமாரும் ராதிகாவும் ஆஜராகினர். இதையடுத்து வருமானவரித்துறை விசாரணையை மேற்கொண்டது. அப்போது நடிகர் சரத்குமாரும் ராதிகாவும் வரிஏய்ப்பு செய்துள்ளதை ஒப்புக்கொண்டுள்ளதாக கூறப்படுகிறது. வருமானவரித்துறையின் விசாரணையில் சுமார் 4.97 கோடி அளவில் ராடான் நிறுவனத்தில் வரி ஏய்ப்பு செய்யப்பட்டுள்ளதாக கூறப்பட்டது. இதையடுத்து வரி ஏய்ப்பு செய்ததற்கான அபராத தொகையை செலுத்தவுள்ளதாக சரத்-ராதிகா தரப்பில் தகவல் வெளியாகியுள்ளது. 
 

Stay Updated with Tamil Flash News - Facebook's 'FbStart' Tamil APP

தமிழ்நாடு சார்ந்த செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள... தமிழ் ஃப்ளாஷ் நியூஸ் அப்ளிகேஷன்! ஃபேஸ்புக்குக்கே பிடித்த நம்பர் 1 தமிழ் நியூஸ் ஆப்... Tamil Flash News..!

பதிவிறக்க... க்ளிக் http://bit.ly/FreeTFN

Advertisement
Advertisement
Advertisement
Advertisement
Advertisement

எடிட்டர் சாய்ஸ்

வெறும் ஆறே ரன்கள்.. போட்டியில் தோல்வி! ஆனாலும் அனைவரின் மனதையும் நெகிழவைத்த அந்த கிரிக்கெட் மேட்ச்! #MustRead #MondayMotivation
Advertisement

MUST READ

Advertisement
[X] Close