Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

[X] Close

கேரள நம்பூதிரிகளை முந்தும் பொன்னார், தமிழிசை: போட்டுத்தாக்கிய திருநாவுக்கரசர்!

ஆர்.கே.நகர் பொதுக்கூட்டத்தில், தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் திருநாவுக்கரசர் பேசியதாவது, "தமிழகத்தில் காலூன்ற பி.ஜே.பி முயற்சித்துவருகிறது. ஆர்.கே.நகர் இடைத்தேர்தலில் அவர்கள் பன்னீர்செல்வம், தீபாமூலம் வெற்றிபெற நினைத்தனர். ஆனால், அதற்குள் தேர்தலை ரத்துசெய்துவிட்டது தேர்தல் ஆணையம். அவர்கள் நினைப்பது தமிழகத்தில் ஒருபோதும் நடக்காது. 

Thirunavukkarasar


இந்த  இடத்தில், தி.மு.க. வெற்றிக் கூட்டத்தை நடத்தி இருக்க வேண்டும். ஆனால் அந்த வெற்றி, தேர்தல் ஆணையத்தின்மூலம் தள்ளிப் போடப்பட்டுள்ளது. எப்போது தேர்தல் வைத்தாலும், தி.மு.க கூட்டணி மாபெரும் வெற்றி அடையும். தமிழகம், மிகப் பெரிய மாநிலம். அதற்கு ஒரு நிரந்தர கவர்னரை நியமிக்க, மத்திய அரசுக்குத் துப்பில்லை.


தி.மு.க சார்பில் மும்பை சென்றுதான், கவர்னரைப் பார்த்து புகார் மனு கொடுத்திருக்கின்றனர். இதற்காக அவர்களுக்கு ரூ.1 லட்சம் வரை செலவு ஆகி இருக்கலாம் என நினைக்கிறேன். மூன்று பேர் போய் வரவே இவ்வளவு செலவு ஆகிறது என்றால், சாதாரண மக்களால் மும்பை சென்று கவர்னரைப் பார்த்து வர முடியுமா?


இதற்கெல்லாம் அக்கறை எடுக்காமல், இடைத்தேர்லை நிறுத்துவதில் ஆர்வம் காட்டுகிறார்கள். பி.ஜே.பி வெற்றிபெற வேண்டும் என்று அவர்கள் நினைப்பதே மிகப்பெரிய நகைச்சுவை. ஆனால், அவர்கள் நினைப்பது எல்லாம் தமிழகத்தில் நடக்கிறது. அதுதான் ஆச்சர்யம். அ.தி.மு.க-வை இல்லாமல் ஆக்குவோம் என்றார்கள்.


சின்னம் முடக்கப்படும் என்றார்கள். இடைத்தேர்தலை ரத்துசெய்ய வேண்டும் என்றார்கள். இப்படி தமிழிசையும், பொன்னாரும், நடக்கப் போவதை முன் கூட்டியே சொன்னார்கள். அதெல்லாம் நடந்து விட்டது. கேரள நம்பூதிரிகள் கூட  இவர்களது ஜோசியக் கலையைப் பார்த்து அதிர்ந்துபோய்க் கிடக்கிறார்கள்" என்றார்

உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்

Advertisement
Advertisement
Advertisement
Advertisement

எடிட்டர் சாய்ஸ்

Advertisement

MUST READ

Advertisement
[X] Close