Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

[X] Close

திருமங்கலம் டு நேரு பூங்கா மெட்ரோ ரயில்... மே மாதம் ஓடும்!

சென்னை மெட்ரோ ரயில் பணி,  2012–ம் ஆண்டு நேரு பூங்காவில் தொடங்கியது. தற்போது, திருமங்கலம் - நேரு பூங்கா வரை பாதை அமைக்கும் பணி நிறைவடைந்த நிலையில், சோதனை ஓட்டம் நடந்துவந்தது. இதுகுறித்த ஆவணங்களை, பெங்களூரில் உள்ள மெட்ரோ ரயில் பாதுகாப்பு ஆணையர் அலுவலகத்துக்கு சென்னை மெட்ரோ ரயில் நிர்வாகம் அனுப்பிவைத்தது.

Metro

இதையடுத்து, அந்தப் பாதையில் ஆய்வு செய்வதற்காக மெட்ரோ ரயில் பாதுகாப்பு ஆணையர் கே.ஏ.மனோகரன், தன் குழுவினருடன் ஏப்ரல் 12-ம் தேதி சென்னைக்கு வந்தார். கட்டுமானம், மின் வசதி, அவசரகால வசதிகள் ஆகியவற்றை ஆய்வுசெய்தார்.

இதுகுறித்து, மெட்ரோ ரயில் நிறுவனத்தின் நிர்வாக அலுவலர் பங்கஜ்குமார் பன்சால் கூறுகையில், ''திருமங்கலம்–நேரு பூங்கா இடையே மே மாதம் ரயில் போக்குவரத்து தொடங்க நடவடிக்கை எடுக்கப்பட்டுவருகிறது. நேரு பூங்காவில் இருந்து சென்ட்ரல் ரயில் நிலையம் வரையிலான பணிகள், இந்த ஆண்டு இறுதிக்குள் முடிக்கப்படும்.

இதைத் தொடர்ந்து, சின்னமலை –வண்ணாரப்பேட்டை இடையேயான பணிகளை விரைந்து முடிக்கத் திட்டமிட்டுள்ளோம். சென்னையில் மெட்ரோ ரயில் சேவைக்காக நடந்துவரும் 45 கிலோ மீட்டர் தூரப் பணிகள் முற்றிலுமாக முடிவடைந்து, 2018–ம் ஆண்டு அனைத்து பாதைகளிலும் ரயில்கள் இயக்கப்படும். நீட்டிப்புசெய்யப்பட்ட விம்கோ நகர் பகுதிகளில், 2019–ம் ஆண்டு ரயிலை இயக்கத் திட்டமிட்         டுள்ளோம்'' என்று கூறினார்.

 

Advertisement
Advertisement
Advertisement
Advertisement
Advertisement

எடிட்டர் சாய்ஸ்

Advertisement

MUST READ

Advertisement
[X] Close