Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

[X] Close

விவசாயிகளுக்கு ஆதரவாக கத்திப்பாராவில் போராட்டம் : ஸ்தம்பித்தது சென்னை!

டெல்லியில் கடந்த ஒரு மாத காலமாகப் போராடிவரும் தமிழக விவசாயிகளுக்கு ஆதரவாக, சென்னை கத்திப்பாரா பாலத்தில் போராட்டம் நடைபெற்றுவருகிறது. இயக்குநர் கௌதமன் தலைமையிலான இந்தப் போராட்டத்தால், போக்குவரத்து கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளது. மக்கள் அலுவலகம், கல்லூரி, பள்ளி செல்லும் நேரம் என்பதால் போக்குவரத்து கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது. அந்த வழியாகச் செல்லும் அனைத்து வாகனங்களும் தேங்கி நிற்கின்றன!


 

இயக்குநர் கௌதமன் தலைமையிலான போராட்டக் குழுவினர், கத்திப்பாரா மேம்பாலத்தில் சாலையை சங்கிலியால் மறித்துப் பூட்டி வைத்துவிட்டனர். இந்த மறியல் போராட்டத்தைத் தடுக்க காவல்துறை முயற்சிசெய்துவருகிறது.

Advertisement
Advertisement
Advertisement

எடிட்டர் சாய்ஸ்

“மாட்டின் மீதான அக்கறை, சிசுக்கள் மீது கிடையாதா?!” நெஞ்சு பொறுக்குதில்லையே #GorakhpurTragedy
Advertisement

MUST READ

Advertisement
[X] Close