Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

[X] Close

குழந்தைகளுடன் ராமேஸ்வரம் வந்த இலங்கைத் தமிழ்ப் பெண்!

மாமியார் கொடுமையில் இருந்து மீள்வதற்காக, குழந்தைகளுடன் அகதியாக வந்த இலங்கைத் தமிழ்ப் பெண் ஒருவர், ராமேஸ்வரம் வந்துள்ளார். அவரிடம் கடலோரப் பாதுகாப்புப் படையினர் விசாரணை நடத்திவருகின்றனர்.

இலங்கை, பண்டாரநாயகபுரம் ராஜகிரி பகுதியைச் சேர்ந்தவர் விக்னேஸ்வரன். இவர் வெளிநாட்டில் வசித்துவருகிறார். இவரின் மனைவி தங்கம், குழந்தைகள் லக்ஷிகா, ஐஸ்நிகா, சுதிசன் ஆகியோருடன் கொழும்பில் உள்ள மாமியார் வீட்டில் வசித்துவந்துள்ளார். அங்கு தங்கத்தை அவர் மாமியார் கொடுமைப்படுத்தியுள்ளார்.

இதனால், தூத்துக்குடி அருகே உள்ள மணியாச்சியில் வசித்துவரும் தன் பெற்றோரிடம் சேர்ந்து வாழ தன் குழந்தைகள் மூவருடனும் நேற்றிரவு படகுமூலம் தனுஷ்கோடி வந்துள்ளார். படகோட்டிகள் இவர்களை அரிச்சல் முனை பகுதியில் உள்ள மணல் திட்டில் நள்ளிரவில் இறக்கிவிட்டுச் சென்றுள்ளனர்.
கைக்குழந்தைகளுடன் மணல் திட்டில் தவித்த இவர்களை, தமிழக கடலோர பாதுகாப்புக் குழும போலீஸார் மீட்டுவந்தனர். மண்டபத்தில் உள்ள கடலோர பாதுகாப்புக் காவல் நிலையத்தில் தொடர் விசாரணை நடத்திவருகின்றனர்.

- இரா.மோகன்

படம்: உ.பாண்டி

உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்

Advertisement
Advertisement
Advertisement
Advertisement

எடிட்டர் சாய்ஸ்

Advertisement

MUST READ

Advertisement
[X] Close