Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

[X] Close

மதுபானக் கடைகளை அகற்றும் உத்தரவுக்கு எதிராக, உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு!

நெடுஞ்சாலையோர மதுபானக் கடைகளை அகற்ற உத்தரவிட்டதற்கு எதிராக, உச்சநீதிமன்றத்தில் தமிழ்நாடு பார் மற்றும் கிளப் உரிமையாளர்கள் சங்கம் மேல்முறையீடு செய்துள்ளது.

supreme court
 

தேசிய, மாநில நெடுஞ்சாலைகளில் செயல்படும் மதுக்கடைகள், பார்கள், பப்புகள் மற்றும் நட்சத்திர விடுதி பார்கள் மூடப்பட வேண்டும் என்று ‘அரைவ் சேஃப்’ என்ற தன்னார்வத் தொண்டு நிறுவனம் சார்பில், உச்சநீதிமன்றத்தில் பொதுநல வழக்குத் தொடரப்பட்டது. இந்தியாவில் அதிகரித்துவரும் சாலை விபத்துகளுக்கு, மது போதையே முக்கியக் காரணம் என்று அரைவ் சேஃப் தொண்டு நிறுவனம் மனுவில் குறிப்பிட்டிருந்தது.

இதனைத் தொடர்ந்து, மார்ச் 31-ம் தேதிக்குப் பிறகு நெடுஞ்சாலையில் இருந்து 500 மீட்டருக்குள் உள்ள அனைத்து டாஸ்மாக் கடைகளும் மூடப்பட வேண்டும் என்று உச்சநீதிமன்றம் உத்தரவிட்டது. இந்தத் தடை உத்தரவு, ஏப்ரல் 1-ம் தேதி நள்ளிரவு முதல் அமலுக்கு வந்தது. அதன்படி, தமிழக நெடுஞ்சாலைகளில் இருந்த 3303 கடைகள் மூடப்பட்டன. அதேபோல சென்னை நெடுஞ்சாலையில் உள்ள 41 நட்சத்திர விடுதிகளில் இருந்த பார்களும் மூடப்பட்டன.

இந்த நிலையில், இந்தத் தீர்ப்புக்கு எதிராக தமிழ்நாடு பார் மற்றும் கிளப் உரிமையாளர்கள் சங்கம் உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளது.  அந்த மனுவில், ’டாஸ்மாக் கடைகளையும், தங்களையும் ஒன்றாகப் பார்க்கக்கூடாது. உச்சநீதிமன்ற உத்தரவால் 500 கடைகளை மூடவேண்டி உள்ளது. இதனால் பெரும் இழப்பு ஏற்படும்’ என்று குறிப்பிடப்பட்டுள்ளது. 
 

Stay Updated with Tamil Flash News - Facebook's 'FbStart' Tamil APP

தமிழ்நாடு சார்ந்த செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள... தமிழ் ஃப்ளாஷ் நியூஸ் அப்ளிகேஷன்! ஃபேஸ்புக்குக்கே பிடித்த நம்பர் 1 தமிழ் நியூஸ் ஆப்... Tamil Flash News..!

பதிவிறக்க... க்ளிக் http://bit.ly/FreeTFN

Advertisement
Advertisement
Advertisement
Advertisement
Advertisement

எடிட்டர் சாய்ஸ்

வெறும் ஆறே ரன்கள்.. போட்டியில் தோல்வி! ஆனாலும் அனைவரின் மனதையும் நெகிழவைத்த அந்த கிரிக்கெட் மேட்ச்! #MustRead #MondayMotivation
Advertisement

MUST READ

Advertisement
[X] Close