Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

[X] Close

டி.டி.வி.தினகரனுக்கு நீதிபதி கண்டிப்பான உத்தரவு!

 

அந்நியச் செலாவணி மோசடி வழக்கில், வரும் 19 மற்றும் 20 ஆகிய தேதிகளில் டி.டி.வி.தினகரன் கண்டிப்பாக ஆஜராக வேண்டும் என்று சென்னை எழும்பூர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

1995,1996-ம் ஆண்டுகளில், டி.டி.வி.தினகரனின் வங்கிக் கணக்குகளில், வெளிநாட்டில் இருந்து பெரும் தொகை டெபாசிட் செய்யப்பட்டது. இதையடுத்து, அவர் மீது அந்நியச் செலாவணி மோசடி வழக்கை அமலாக்கத்துறை பதிவுசெய்தது. இதையடுத்து, தினகரனுக்கு 28 கோடி ரூபாய் அமலாக்கத்துறை அபராதம் விதித்தது.

இந்த அபராதத்தை ரத்து செய்யக்கோரி, டி.டி.வி.தினகரன் தாக்கல்செய்த மனுவை, சென்னை உயர்நீதிமன்றம் தள்ளுபடிசெய்தது. இந்த வழக்கு, எழும்பூர் நீதிமன்றத்தில் இன்று விசாரணைக்குவருகிறது. கடந்த முறை இந்த வழக்கு விசாரணைக்கு வந்தபோது, ஆர்.கே.நகர் இடைத்தேர்தலைக் காரணம் காட்டி, டி.டி.வி.தினகரன் ஆஜராகாமல் இருந்தார்.

இந்த வழக்கு, எழும்பூர் நீதிமன்றத்தில் இன்று விசாரணைக்கு வந்தது. அப்போது, டி.டி.வி.தினகரன் ஆஜராகவில்லை. இதைக் கண்டித்த நீதிபதி, வரும் 19, 20 ஆகிய தேதிகளில் டி.டி.வி.தினகரன் கண்டிப்பாக ஆஜராக வேண்டும். 19-ம் தேதி ஒரு வழக்கும், 20-ம் தேதி ஒரு வழக்கும் விசாரிக்கப்படும் என்று நீதிபதி தெரிவித்தார்.

Advertisement
Advertisement
Advertisement

எடிட்டர் சாய்ஸ்

“மாட்டின் மீதான அக்கறை, சிசுக்கள் மீது கிடையாதா?!” நெஞ்சு பொறுக்குதில்லையே #GorakhpurTragedy
Advertisement

MUST READ

Advertisement
[X] Close