Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

[X] Close

’தயவுசெய்து கழிப்பறை கட்டுங்கள்’... மக்களின் காலில் விழுந்த  நகராட்சி ஆணையர்!

புதுவை, உழவர்கரை  நகராட்சி ஆணையர் மற்றும் ஊழியர்கள், அந்தப் பகுதி மக்களிடம், வீடுகளில் கழிப்பறை கட்டுமாறு கூறி, அவர்களின் காலில் விழுந்து வேண்டுகோள் விடுத்தனர். 

municipal commissioner
 

புதுவையில், உழவர்கரை நகராட்சிக்கு உள்பட்ட பகுதிகளில், தூய்மை இந்தியா திட்டத்தின் கீழ் கழிப்பறை கட்டுவதற்காக 942 பயனாளிகளைத் தேர்வுசெய்து, அரசு உதவித்தொகை தந்தது. முதல்கட்டமாக, 10,000 ரூபாயை அவர்களின் வங்கிக் கணக்குகளில் செலுத்தப்பட்டது. 942 பயனாளிகளில், 254 பயனாளிகள் மட்டுமே நிதியினை முறையாகப் பயன்படுத்தியுள்ளனர்.

இதனை அறிந்த உழவர்கரை நகராட்சி ஆணையர் ரமேஷ், அந்தப் பகுதி மக்களை கழிப்பறை கட்டவைக்க, நூதன முறையில் விழிப்பு உணர்வு பிரசாரம் நடத்த முடிவுசெய்தார். நகராட்சி ஊழியர்களை அழைத்துக்கொண்டு ஒவ்வொரு வீடாகச் சென்று, மக்களின் காலில் விழுந்து கழிப்பறை கட்டுமாறு கூறி வலியுறுத்தினார். கழிப்பறையின் முக்கியத்துவத்தையும் விளக்கினார்.

- ஜெ.முருகன்

Advertisement
Advertisement
Advertisement
Advertisement
Advertisement

எடிட்டர் சாய்ஸ்

Advertisement

MUST READ

Advertisement
[X] Close