Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

[X] Close

விவசாயிகள் தற்கொலை! தமிழக அரசுக்கு உச்சநீதிமன்றம் சாட்டையடி!

Supreme court

'விவசாயிகள் பிரச்னையில், தமிழக அரசு மெத்தனப் போக்கைக் கடைப்பிடிக்கக்கூடாது' என்று எச்சரித்த உச்சநீதிமன்றம், 'விவசாயிகள் தற்கொலைத் தடுப்பு நடவடிக்கைகுறித்து, இரண்டு வாரத்தில் பதில் அளிக்க வேண்டும்' என தமிழக அரசுக்கு உத்தரவிட்டுள்ளது.

தமிழகத்தில் ஏற்பட்டுள்ள கடும் வறட்சி காரணமாக பயிர்கள் கருகியதால், மன வேதனையால் நூற்றுக்கும் மேற்பட்ட விவசாயிகள் தற்கொலை செய்துகொண்டனர். இறந்துபோன விவசாயிகளின் குடும்பத்தினருக்கு இதுவரை தமிழக அரசு இழப்பீடு வழங்கவில்லை. இதனிடையே, பயிர்க் கடன்களை ரத்துசெய்ய வேண்டும் என்பது உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி, தமிழக விவசாயிகள் ஒரு மாதத்துக்கும் மேல் டெல்லியில் பல நூதனப் போராட்டங்களை நடத்திவருகின்றனர். இவர்களைப் பிரதமரும், மத்திய அமைச்சர்களும் கண்டுகொள்ளவில்லை.

இந்த நிலையில், பயிர்கள் கருகியதால் தமிழக விவசாயிகள் தற்கொலை செய்துவருவதாகவும், விவசாயிகள் தற்கொலையைத் தடுக்க தமிழக அரசுக்கு உத்தரவிட வேண்டும் என்றும், தமிழ்நாடு பாெதுநல வழக்காடு மையம் சார்பில் உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. இந்த வழக்கு, உச்சநீதிமன்றத்தில் இன்று விசாரணைக்கு வந்தது.

அப்போது, 'விவசாயிகள் பிரச்னையில் தமிழக அரசு மெத்தனப் போக்கைக் கடைப்பிடிக்கக்கூடாது. விவசாயிகளின் தற்கொலையில் தமிழக அரசு மௌனம்காப்பது வருத்தம் அளிக்கிறது. மாநில அரசு அமைதிகாப்பது சரியான அணுகுமுறை அல்ல. விவசாயிகளின் பிரச்னையை மனிதாபிமான அடிப்படையில் அணுக வேண்டும். விவசாயிகள் பிரச்னைக்காக எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் என்ன என்பது குறித்து இரண்டு வாரத்தில் பதில் அளிக்க வேண்டும்' என்று தமிழக அரசுக்கு உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. இதையடுத்து, வழக்கு விசாரணையை மே 2-ம் தேதிக்கு உச்சநீதிமன்றம் ஒத்திவைத்தது.

Advertisement
Advertisement
Advertisement

எடிட்டர் சாய்ஸ்

“மாட்டின் மீதான அக்கறை, சிசுக்கள் மீது கிடையாதா?!” நெஞ்சு பொறுக்குதில்லையே #GorakhpurTragedy
Advertisement

MUST READ

Advertisement
[X] Close