Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

[X] Close

‘சென்னை சுடுகாட்டில் இலவச வைஃபை வசதி!’ - காரணம் தெரிந்தால் அசந்துபோவீர்கள்!

சென்னை அண்ணாநகர் வேலங்காடு மின்மயானம்

தமிழகத்தில் முதன்முறையாக, சென்னை அண்ணாநகரில் உள்ள சுடுகாட்டில், இலவச வைஃபை வசதி வழங்கப்பட உள்ளது. வரும் காலத்தில், இறுதிச்சடங்கு நிகழ்ச்சியை நேரலையாக ஒளிபரப்பவும் திட்டமிடப்பட்டுள்ளது.

சென்னை மாநகராட்சியின் கட்டுப்பாட்டில், மின்மயானங்கள் செயல்பட்டுவருகின்றன. 'இறுதிச்சடங்கு இலவசம்' என்று மாநகராட்சி அறிவித்தாலும், சில இடங்களில் புரோக்கர்கள் தொல்லை அதிகளவில் இருந்தது. மேலும், பராமரிப்பு இல்லாமல் மின்மயானங்கள் பாழடைந்து காணப்பட்டன. மின்மயானத்தில் சமூகவிரோதச் செயல்கள் நடந்தன. இதுதொடர்பான புகார், சென்னை மாநகராட்சி நிர்வாகத்துக்குச் சென்றது. இதையடுத்து, சென்னையில் உள்ள மின்மயானங்களைத் தன்னார்வத் தொண்டு நிறுவனங்களிடம் ஒப்படைக்க, மாநகராட்சி நிர்வாகம் முடிவுசெய்தது. அதன்படி, சென்னை அண்ணாநகர், வேலங்காடு பகுதியில் உள்ள மின்மயானம் ஐ.சி.ஓ.டபுள்யூ என்ற என்ஜிஓ-விடம் ஒப்படைக்கப்பட்டது. அந்த அமைப்பு, மின்மயானத்தில் பல்வேறு மாற்றங்களையும் புதுமைகளையும் ஏற்படுத்தி வருகிறது. 

சென்னை அண்ணாநகர் வேலங்காடு மின்மயானம்

 

  பிரவினாஇதுகுறித்து ஐ.சி.டபுள்.யூ அமைப்பின் செயலாளர் ஹரிகரன், வேலங்காடு மின்மயானப் பொறுப்பாளர் பிரவீனா ஆகியோர் கூறுகையில், "கடந்த 2014-ம் ஆண்டு மார்ச் மாதம், சென்னை மாநகராட்சி நிர்வாகத்திடம் இருந்து வேலங்காடு மின்மயானத்தின் முழுப்பொறுப்பையும் ஏற்றுக்கொண்டோம். ஆரம்பத்தில் இந்த மின்மயானத்தில், புரோக்கர்கள் தொல்லை போன்ற பல சிரமங்கள் இருந்தன. அவற்றை முதலில் சரிசெய்தோம். புரோக்கர்கள் இல்லாமல் மக்களுக்கு இலவசமாக சேவைசெய்துவருகிறோம். நான்கரை ஏக்கர் பரப்பளவில் அமைந்துள்ள இந்த மின்மயானம் பராமரிப்பின்றிக் காணப்பட்டது. இதனால், அதைச் சுத்தப்படுத்தினோம். தேவையான வசதிகளைச் செய்து கொடுத்தோம். குறிப்பாக, கழிவறை ஹரிகரன்வசதிகள் ஏற்படுத்தப்பட்டன. இறப்புச் சான்றிதழ் பதிவு உள்ளிட்ட பணிகளையும் மேற்கொண்டோம். 

மின்மயானத்தில் அதிகளவில் பூமாலைகள் குவிந்தன.அந்தக் குப்பைகளை அகற்றுவதில் சிரமம் ஏற்பட்டது. அதற்கு மாற்றுவழியாக பூமாலைகளிலிருந்து இயற்கையான முறையில் உரம் தயாரிக்க முடிவுசெய்தோம். தற்போது, இயற்கை உரம் தயாரித்து மின்மயான வளாகத்தில் உள்ள செடிகளுக்கும் மரங்களுக்கும் பயன்படுத்திவருகிறோம்.

இங்கு வருபவர்கள், கழிவறையைப் பயன்படுத்தாமல் இருந்தனர். இதனால், கழிவறையைப் பயன்படுத்தும் நபர்களை குலுக்கல் முறையில் தேர்வுசெய்து பரிசுப் பொருள்கள் வழங்கினோம். அதன்பிறகு, கழிவறைகளைப் பயன்படுத்துவோரின் எண்ணிக்கை அதிகரித்தது. 

இந்தச் சூழ்நிலையில், தமிழகத்தில் முதல்முறையாக, சென்னை மின்மயானத்தில் இலவச வைஃபை வசதியை ஏற்படுத்தத் திட்டமிட்டோம். அதன்படி, வரும் 15-ம் தேதிக்குப் பிறகு, வேலங்காடு மின்மயானத்தில் இலவச வைஃபை வசதி அறிமுகப்படுத்தப்பட உள்ளது. இதற்கான அனைத்து ஏற்பாடுகளும் துரிதமாக நடந்துவருகின்றன. இலவச வைஃபை வசதி ஏற்படுத்த ஒரு காரணமும் உள்ளது. 
இறுதிச்சடங்கு நிகழ்ச்சிகளுக்கு வர முடியாதவர்கள், மின்மயானத்தில் நடக்கும் நிகழ்வுகளை இணையத்தின்மூலம் நேரலையாகத் தெரிந்துகொள்ள வழிவகைசெய்யப்படும். இந்த இலவச வைஃபை திட்டத்துக்கு, நிச்சயம் மக்கள் மத்தியில் வரவேற்பு கிடைக்கும் என்று எதிர்பார்க்கிறோம்" என்றனர்.

- எஸ்.மகேஷ்

உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்

இது தொடர்பா வேற என்னலாம் நடந்திருக்குனு தெரிஞ்சுக்கலாமா?

Advertisement
Advertisement
Advertisement
Advertisement

எடிட்டர் சாய்ஸ்

Advertisement

MUST READ

Advertisement
[X] Close