Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

[X] Close

மிரட்டிய மணல் கடத்தல்காரர்... அதிரவைத்த எஸ்ஐ... கடைசியில் நடந்தது இதுதான்!

தமிழகம் முழுவதும் மணல் கடத்தலைத் தடுக்க தமிழக அரசு, சிறப்பு அதிகாரிகளை நியமித்து பல்வேறு நடவடிக்கை எடுத்து வருகிறது. இந்த நிலையில் மணல் கடத்தலில் ஈடுபட்ட அ.தி.மு.க. ஒன்றியச் செயலாளர் மீது நடவடிக்கை எடுக்க முயன்ற காவல் உதவி ஆய்வாளர் தாக்கப்பட்டிருப்பது அரியலூர் மாவட்டம் செந்துறை கிராமமே பரபரப்புடன் காணப்படுகிறது.

செந்துறை கிராம மக்கள், 'எங்கள் மாவட்டத்தின் ஹீரோ' என்று காவல்துறை உதவி ஆய்வாளரை பாராட்டி போஸ்டர்கள் அடித்ததுமட்டுமில்லாமல் அதை வாட்ஸ்அப்,பேஸ்புக்கில் அதிகமாக ஷேர் செய்துவருகிறார்கள். மணல்கடத்தலைத் தடுக்க கிராம மக்களே அனைத்துக் கட்சி கூட்டமைப்பு என்ற அமைப்பை உருவாக்கியுள்ளனர். அந்த அமைப்பினர் வழக்கு தொடர உள்ளார்களாம். என்ன நடந்தது; ஏன் வழக்கு என்று பேசத்தொடங்கினோம் அனைத்துக் கட்சி கூட்டமைப்பின் செந்துறை பகுதித் தலைவர் ஞானமூர்த்தியிடம், ''ஆளுங்கட்சியினரின் அட்டகாசம் நாளுக்கு நாள் அதிகரித்துக்கொண்டே இருக்கிறது. ஆற்றிலிருந்து மணல் எடுப்பதால் நிலத்தடி நீர்மட்டம் வெகுவாக குறைவதோடு, குடிநீர் பிரச்னை ஏற்படுகிறது. இதனைக் கண்டித்து பொதுமக்கள் ஆங்காங்கே போராட்டம் நடத்திவருகிறார்கள். அந்த வகையில் அரியலூர் மாவட்டம் செந்துறை அருகேயுள்ள தெத்தேரியில் அ.தி.மு.க ஒன்றியச் செயலாளர் சுரேஷ் திருட்டு மணல் எடுப்பதாக எஸ்.ஐ கமலஹாசனுக்கு பகுதி மக்கள் தகவலளித்துள்ளனர். அதன் அடிப்படையில் மார்ச் 31-ம் தேதி இரவு 8.30 மணியளவில் எஸ்.ஐ கமலஹாசன், காவலர் ஒருவரை அழைத்துக்கொண்டு தெத்தேரி பகுதிக்குச் சென்றுள்ளார். அங்கு ஜே.சி.பி வாகனத்தை வைத்துக்கொண்டு லாரியில் மணல் அள்ளிக்கொண்டிருந்தார்கள். இதை பார்த்த எஸ்.ஐ கமஹாசன் மணல் அள்ளிய ஐந்து பேரை கைது செய்தும் ஜேசிபி வாகனம், லாரியை பறிமுதல் செய்துள்ளார்.

அப்போது. அங்கிருந்த ஒருவர், அ.தி.மு.க. ஒன்றியச்செயலாளர் சுரேஷுக்கும், அவரது தம்பி ரமேஷுக்கும் போன் செய்துள்ளார். அங்கு வந்த ரமேஷ், எஸ்ஐ கமலஹாசனை தடுத்து நிறுத்தியுள்ளார். 'கைது செய்த எங்கள் ஆட்களை விடுங்க; இல்லைனா நடக்குறதே வேற' என்று எஸ்.ஐ.யை மிரட்டியுள்ளார். அதற்கு எஸ்.ஐ., ''என்னை மிரட்டுகிற அளவுக்கு உங்களுக்கு தைரியம் வந்துவிட்டதா. உன்னால் முடிந்ததைச் செய்' என கூறிவிட்டுச் சென்றபோது, ரமேஷ் பின் புறத்திலிருந்து எஸ்.ஐ.யின் சட்டையைப் பிடித்து கீழே தள்ளியுள்ளார். அவர் பிடித்து வைத்திருந்த குற்றவாளிகளையும் ஓடச்சொல்லியுள்ளார். பின்பு சுதாரித்த எஸ்.ஐ. ஓடியவர்களை விரட்டிப் பிடித்துள்ளார். இந்தத் தகவல் டி.எஸ்.பி.க்கு போனதும் செந்துறை இன்ஸ்பெக்டர் கருணாநிதியை சம்பவ இடத்துக்கு அனுப்பினார். அவர், பறிமுதல் செய்யப்பட்ட ஜேசிபி, டிப்பர் லாரியையும், கைது செய்யப்பட்ட ஐந்து பேரையும் காவல்நிலையத்துக்கு அழைத்துச் சென்றுள்ளார். அப்போது, எஸ்.ஐ. கமலஹாசனிடம், சாலை மறியல் செய்பவர்களைக் கலைய வைத்துவிட்டு காவல்நிலையத்துக்கு வாங்கனு சொல்லிவிட்டு கிளம்பியுள்ளார் இன்ஸ்பெக்டர் கருணாநிதி. போராட்டத்தை முடித்துவிட்டு காவல்நிலையத்துக்குச் சென்று பார்த்தபோது, பறிமுதல் செய்யப்பட்ட வாகனங்களும், குற்றவாளிகளும் இல்லாததால் ஆத்திரமடைந்த எஸ்.ஐ. கமலஹாசன், காவல்நிலையத்தில் உள்ள ரைட்டரிடம் கேட்டபோது, அவர்கள் சென்றுவிட்டார்கள் என்று கூறினார். 'நான் கைது செய்தவர்களை யார் வெளியே விட்டது; என்னை அடித்துள்ளார்கள். இப்படிப்பட்டவர்களை வெளியேவிட்டால் காவலர்களுக்கு என்ன மரியாதை இருக்கும்' என்று சத்தம்போட்டுள்ளார். இவர்களை வெளியே விட்டதற்கு முக்கிய காரணமே, பெரம்பலூர் அ.தி.மு.க மாவட்டச் செயலாளர் ஆர்.டி.ராமச்சந்திரன்தான். இவர், இன்ஸ்பெக்டர் கருணாநிதியிடம் பேசியபிறகுதான் குற்றவாளிகளை வெளியே விட்டுள்ளனர். ''அ.தி.மு.க. ஒன்றியச்செயலாளர் சுரேஷ், அவரது தம்பி ரமேஷ் இருவர் மீது பணி செய்யவிடாமல் தடுத்தது; காவலரை தாக்கியது என்று செந்துறை காவல்நிலையத்தில் எஸ்.ஐ. கமலஹாசன் புகார் கொடுத்தார். ஆனால், இன்று வரையிலும் சம்பந்தப்பட்டவர்கள் மீது நடவடிக்கை எடுக்காமல், எஸ்.ஐ. கமலஹாசனை தூத்தூர் காவல்நிலையத்துக்கு இடமாற்றம் செய்துள்ளனர். காவலரை தாக்கியவர்கள் மீது எஸ்.பி நடவடிக்கை எடுக்காமல் எஸ்.ஐ. மீது நடவடிக்கை எடுத்தது சரியா.

திருட்டு மணல் அள்ளுவதற்கு யார் அதிகாரம் கொடுத்தது. கடந்த நான்கு ஆண்டுகளுக்கும் மேல் தெத்தேரியில் திருட்டுமணல் அள்ளி கோடிக்கணக்கில் கொள்ளையடித்துக் கொண்டிருக்கிறார். இது எல்லா அதிகாரிகளுக்கும் தெரியும். ஆனால், என்றாவது ஒருநாள் இந்த அதிகாரிகள் ஆய்வு செய்துள்ளார்களா. இங்குள்ள எல்லா அதிகாரிகளும், காவலர்களுக்கும் மாதாமாதம் பணம் கொடுக்கப்படுகிறது. அதனால், எந்த அதிகாரிகளும் இவர்கள் மீது நடவடிக்கை எடுக்க மறுக்கிறார்கள். ஆனால் எஸ்.ஐ. கமலஹாசன் சிறப்பாக செயல்பட்டார். யாருக்கும் ஆதரவாக செயல்படமாட்டார். போலீஸ்னா யாருன்னு இப்பகுதி மக்களுக்கு தெரியவைத்தவர். கரைபடியாத கைக்குச் சொந்தக்காரர். இவரிடம் ஒத்து போகாததால் கொறடா, வைத்திலிங்கத்திடம் சொல்லி இடமாற்றம் செய்துள்ளார்கள். இது எவ்வளவு வேதனையான விஷயம். இந்த செயலைச்செய்த ஒன்றியச்செயலாளரைக் கண்டித்து அனைத்துக்கட்சி சார்பாக செந்துறையில் போராட்டம் நடத்தப்போகிறோம். அதுமட்டுமில்லாமல், இவர்கள் மீது வழக்குத் தொடரப் போகிறோம்'' என்று முடித்தார்.

இது குறித்து ஒன்றியச்செயலாளர் சுரேஷிடம் பேசினோம். ''நாங்கள் திருட்டுமணல் எதுவும் அள்ளவில்லை. உங்களிடம் பேட்டி கொடுப்பவர் தி.மு.க. ஒன்றியச்செயலாளர் ஞானமூர்த்தி. என்னை கட்சி ரீதியாக எதிர்க்க முடியாமல் எஸ்.ஐ. கமலஹாசனை வைத்து எங்களை எதிர்க்கிறார். இதில் மாவட்டச் செயலாளர், வைத்திலிங்கம், கொறடா யாருக்கும் தொடர்பில்லை" என்று முடித்தார்.

எஸ்.ஐ கமலஹாசனிடம் பேசினோம். ''சம்பவம் நடந்தது உண்மைதான். நான் நேர்மையான அதிகாரி. என்னை எங்கு தூக்கிப்போட்டாலும் போலீஸ்தான். அதில் எந்த மாற்றமில்லை. வேறு எதுவும் கேட்காதீர்கள்'' என்றார்.

- எம்.திலீபன்

படங்கள்: ராபர்ட்

Stay Updated with Tamil Flash News - Facebook's 'FbStart' Tamil APP

தமிழ்நாடு சார்ந்த செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள... தமிழ் ஃப்ளாஷ் நியூஸ் அப்ளிகேஷன்! ஃபேஸ்புக்குக்கே பிடித்த நம்பர் 1 தமிழ் நியூஸ் ஆப்... Tamil Flash News..!

பதிவிறக்க... க்ளிக் http://bit.ly/FreeTFN

Advertisement
Advertisement
Advertisement
Advertisement
Advertisement

எடிட்டர் சாய்ஸ்

வெறும் ஆறே ரன்கள்.. போட்டியில் தோல்வி! ஆனாலும் அனைவரின் மனதையும் நெகிழவைத்த அந்த கிரிக்கெட் மேட்ச்! #MustRead #MondayMotivation
என்ன செய்தார்கள் தமிழ்நாட்டின் 39 எம்.பி-க்கள்? - முழுமையான பெர்ஃபாமன்ஸ் ரிப்போர்ட்
Advertisement

MUST READ

Advertisement
[X] Close