Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

[X] Close

ஜெ. கனவை நனவாக்கிட உறுதியேற்போம்! முதல்வர் பழனிசாமி தமிழ்ப் புத்தாண்டு வாழ்த்து!

ஜெயலலிதாவின் கனவினை நனவாக்கிட, நாம் அனைவரும் ஒற்றுமையுடன் அயராது  உழைத்து, அவர் வகுத்துத் தந்த வளர்ச்சிப் பாதையில் தொடர்ந்து தமிழகத்தைக் கொண்டு செல்ல இந்த நாளில் உறுதியேற்போம் என்று முதல்வர் பழனிசாமி தமிழ்ப் புத்தாண்டு வாழ்த்து தெரிவித்துள்ளார்.

முதல்வர் பழனிசாமி வெளியிட்டுள்ள வாழ்த்துச் செய்தியில், "தமிழ்ப் புத்தாண்டு மலர்கின்ற சித்திரை முதல் நாளான இந்த இனிய நாளில், என் அன்புக்குரிய தமிழ் பெருமக்கள் அனைவருக்கும் எனது இனிய "தமிழ்ப் புத்தாண்டு" திருநாள் நல்வாழ்த்துகளை  மகிழ்ச்சியுடன் தெரிவித்துக் கொள்கிறேன்.

பன்னெடுக்காலமாய் தமிழ்க் குடிமக்கள் சித்திரை முதல் நாளை தமிழ்ப் புத்தாண்டு தினமாக கொண்டாடி வந்த நிலையில், அந்த மரபினை மாற்றி, தமிழ்ப் புத்தாண்டை வேறு ஒரு தினத்துக்கு மாற்றிய செயலை திருத்தி, நமது முன்னோர் வகுத்த வழிமுறையின்படியும், தமிழ் மக்களின் விருப்பப்படியும் சித்திரை முதல் நாளை மீண்டும் தமிழ்ப் புத்தாண்டாக கொண்டாடும் முறையை நிலைநாட்டியவர் ஜெயலலிதா என்பதை இத்தருணத்தில் பெருமையுடன் தெரிவித்துக் கொள்கிறேன். 'தமிழ்நாட்டை அனைத்துத்துறைகளிலும் வளர்ச்சி பெற்ற ஒரு முதன்மை மாநிலமாக உருவாக்குவதே என்னுடைய கனவாகும்’ என்றுரைத்த ஜெயலலிதாவின் கனவினை நனவாக்கிட, நாம் அனைவரும் ஒற்றுமையுடன் அயராது  உழைத்து, அவர் வகுத்துத் தந்த வளர்ச்சிப் பாதையில் தொடர்ந்து தமிழகத்தைக் கொண்டு செல்ல இந்த இனிய நாளில் உறுதியேற்போம்.

இத்தமிழ்ப் புத்தாண்டு, தமிழர் தம் வாழ்வில் புதிய வளர்ச்சியையும் புதிய மலர்ச்சியையும் புதிய வெற்றிகளையும் வழங்கும் ஆண்டாக மலரட்டும் என்று வாழ்த்தி, தமிழ் பெருமக்கள் அனைவருக்கும் மீண்டும் ஒருமுறை எனது உளமார்ந்த சித்திரை தமிழ்ப் புத்தாண்டு நல்வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்கிறேன்" என்று கூறியுள்ளார்.

மத்திய இணையமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன் வெளியிட்டுள்ள வாழ்த்துச் செய்தியில், "உலகத்தமிழர் அனைவரும் கொண்டாடி மகிழ்ந்து கடைப்பிடித்து  வரும் புத்தாண்டு  தினமான சித்திரை முதல்நாள் அன்று அனைவர் இல்லமும் உள்ளமும்; நன்றாக நிறைந்து சிறப்புற்று வாழ அன்புடன் வாழ்த்துகிறேன்.

ஜெய ஆண்டு பிறந்ததன் பயனாக இந்தியத் திருநாட்டில் தேசபக்திமிக்க நரேந்திர மோடியின் வெற்றிமிகு ஆட்சி ஏற்பட்டது. உலகம் முழுவதும் இந்தியாவை வாழ்த்தவும், வரவேற்கவும்;  வரிசையில் வருகின்றன. இந்தியாவின் வளர்ச்சி விண்ணைத் தொடும் அளவுக்கு வேகமாக பிரதமர் மோடியின் ஆட்சி அமைந்துள்ளது. நாடும் நம் வீடும் நாமும் அதனால் மகிழ்கின்றோம். ஹேவிளம்பி ஆண்டு பிறக்கின்ற இந்த நல்ல நாளில் தமிழகத்தை வளர்ச்சிப் பாதையில் அழைத்துச் சென்று ஊழலற்ற தூய்மையான நிர்வாகத்தை தருகின்ற  தாமரையின் ஆட்சியை தமிழகம் கண்டிட மோடியின் வளர்ச்சி வேகத்துக்கு தமிழகம் முன்னேற அனைத்து மக்களும் உறுதியேற்போம். இந்தியாவில் தமிழகம் முதல் நிலை மாநிலமாக மாறிட ஹேவிளம்பி ஆண்டு வழி காட்டட்டும். ஹேவிளம்பி ஆண்டில் தமிழ், தமிழன், தமிழகம் உலகில் முதல்  நிலை பெற்றிட உறுதி ஏற்று பணிபுரிவோம், வெற்றி பெறுவோம். அனைவருக்கும் இனிய தமிழ்ப் புத்தாண்டு வாழ்த்துகள்" என்று கூறியுள்ளார்.

தேமுதிக தலைவர் விஜயகாந்த் வெளியிட்டுள்ள வாழ்த்துச் செய்தியில், "தமிழக மக்களின் கஷ்டங்கள் நீங்கி நிம்மதியாக வாழ புத்தாண்டில் வழிபிறக்கும். உலமெங்கும் தலைகுனிந்து நிற்கும் தமிழர்களின் தலை நிமிர்ந்து நிற்க வழிபிறக்கட்டும்" என்று கூறியுள்ளார்.

Stay Updated with Tamil Flash News - Facebook's 'FbStart' Tamil APP

தமிழ்நாடு சார்ந்த செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள... தமிழ் ஃப்ளாஷ் நியூஸ் அப்ளிகேஷன்! ஃபேஸ்புக்குக்கே பிடித்த நம்பர் 1 தமிழ் நியூஸ் ஆப்... Tamil Flash News..!

பதிவிறக்க... க்ளிக் http://bit.ly/FreeTFN

Advertisement
Advertisement
Advertisement
Advertisement
Advertisement

எடிட்டர் சாய்ஸ்

என்ன செய்தார்கள் தமிழ்நாட்டின் 39 எம்.பி-க்கள்? - முழுமையான பெர்ஃபாமன்ஸ் ரிப்போர்ட்
Advertisement

MUST READ

Advertisement
[X] Close