Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

[X] Close

சரத்குமாரிடம் வருமான வரித்துறை நடத்திய விசாரணை நிறைவு!

Sarathkumar

கடந்த 7-ம் தேதி கொட்டிவாக்கத்தில் இருக்கும் தனது வீட்டில் நடந்த சோதனை குறித்து, இன்று மூன்றாவது முறையாக நுங்கம்பாக்கத்தில் இருக்கும் வருமான வரித்துறை அலுவலகத்தில் நேரில் ஆஜராகி நடிகர் மற்றும் சமத்துவ மக்கள் கட்சியின் தலைவர் சரத்குமார் விளக்கம் அளித்தார்.

விசாரணைக்குப் பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய சரத்குமார், 'வருமான வரித்துறை கைப்பற்றிய ஆவணங்கள் குறித்து விளக்கம் தந்துள்ளேன். விசாரணைக்கு எப்போது அழைத்தாலும் வரத் தயார்' என்று கூறியுள்ளார். 

ராடன் மீடியா நிறுவனம் 4.97 கோடி ரூபாய் வரி ஏய்ப்பு தொடர்பாகவும் சரத்குமார் விளக்கம் தந்துள்ளதாக தகவல் கூறுகின்றது. 

கொட்டிவாக்கம் வீட்டில் நடந்த சோதனையைத் தொடர்ந்து, தனது மனைவி நடிகை ராதிகாவுக்குச் சொந்தமான ராடன் மீடியா நிறுவன அலுவலகத்திலும் வருமான வரித்துறை சோதனை நடத்தியது. இதையடுத்து, கணவன் மனைவி இருவரும் ஒன்றாக நேற்று வருமான வரித்துறை அலுவலகத்தில் நேரில் ஆஜராகி விளக்கம் அளித்தனர்.

 

Advertisement
Advertisement
Advertisement
Advertisement
Advertisement

எடிட்டர் சாய்ஸ்

Advertisement

MUST READ

Advertisement
[X] Close