Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

[X] Close

கத்திப்பாரா பாலத்துக்கு பூட்டு போட்டு போராட்டம் - கவுதமனை சிறையில் அடைக்க உத்தரவு

கிண்டி பாலத்தை மறித்து போராட்டத்தில் ஈடுபட்ட இயக்குநர் கவுதமன் உள்பட 6 பேரை ஏப்ரல் 25-ம் தேதி வரை நீதிமன்ற காவலில் வைக்க ஆலந்தூர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. சென்னை கிண்டி பகுதியில் அமைந்துள்ளது கத்திப்பாரா பாலம். இந்த பாலம் தாம்பரம், கோயம்பேடு, போரூர், அடையாறு மார்க்கம் வழியாக வரும் வாகனங்களை இணைக்கும் வகையில் அமைந்துள்ள சென்னையின் மிக முக்கியமான பாலமாகும். விவசாயிகளுக்கு ஆதரவாக இயக்குநர் கவுதமன் தலைமையில் கத்திப்பாரா பாலத்தை மறித்து போராட்டத்தில் ஈடுபட்டனர்.

Gouthaman

விவசாயிகளுக்கு ஆதரவாக கத்திப்பாராவில் நடைபெற்ற இளைஞர்களின் போராட்டம் - புகைப்படத் தொகுப்பைக் காண click here

இன்று காலையில் திடீரென கத்திப்பாரா பாலத்துக்குச் சென்ற போராட்டக் குழுவினர் பாலத்தில் வாகனங்கள் செல்ல முடியாதவாறு பாலத்தின் ஒரு முனையில் இருந்து மற்றொரு முனை வரை பெரிய இரும்புச் சங்கிலியால் பாலத்தை மறித்து பூட்டு போட்டனர். இதனால் வாகனங்கள் செல்ல முடியாமல் போனது. காலை அலுவலக நேரம் என்பதால் மிகவும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. நீண்ட நேரத்துக்குப் பிறகே காவல்துறையினருக்கு விஷயம் தெரிந்தது. சம்பவ இடத்துக்கு வந்த காவல்துறையினர் கவுதமன் உள்பட அவருடன் இணைந்து போராட்டத்தில் ஈடுபட்ட அனைவரையும் கைது செய்தனர்.

பின்னர் ஆக்‌ஷா ப்ளேடைக் கொண்டு இரும்புச் சங்கிலியை அறுத்தனர். ஆக்‌ஷா ப்ளேடு மூலம் இரும்புச் சங்கிலியை அறுத்து போக்குவரத்தை சரி செய்வதற்கு காவல்துறையினருக்கு நீண்ட நேரம் ஆனது. பிறகு கவுதமன் உள்பட 6 பேரை ஆலந்தூர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தினர். வழக்கை விசாரித்த நீதிபதி அவர்கள் அனைவரையும் ஏப்ரல் 25-ம் தேதி வரை நீதிமன்றக் காவலில் வைக்க உத்தரவிட்டார். விவசாயிகளுக்கு ஆதரவான அந்தப் போராட்டத்தால் சுமார் ஒரு மணி நேரம் சென்னையே ஸ்தம்பித்தது.

படம் : கே.ஜெரோம்

Advertisement
Advertisement
Advertisement
Advertisement
Advertisement

எடிட்டர் சாய்ஸ்

Advertisement

MUST READ

Advertisement
[X] Close