Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

[X] Close

குடிநீர் திட்டப்பணிக்கு ரூ.100 கோடி ஒதுக்கி முதல்வர் எடப்பாடி பழனிசாமி உத்தரவு!

தமிழகத்தின் குடிநீர் திட்டப்பணிகளுக்காக 100 கோடி ரூபாயை ஒதுக்கி தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி உத்தரவிட்டுள்ளார். தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி தலைமையில் குடிநீர் திட்டப்பணிகள் மற்றும் வறட்சி நிவாரணம் வழங்குதல் தொடர்பான ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது.

அந்தக் கூட்டத்தின்போது கழிவுநீர் அகற்று வாரியத்துக்கு கூடுதலாக  40 கோடி ரூபாயும் நகராட்சி நிர்வாகத் துறைக்கு 35 கோடி ரூபாயும் தமிழ்நாடு குடிநீர் வடிகால் வாரியத்துக்கு கூடுதலாக 25 கோடி ரூபாயும் என தமிழகம் முழுவதும் உள்ள குடிநீர் திட்டங்களுக்கு 100 கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்வதற்கு பழனிசாமி உத்தரவிட்டார். கால்நடைத் தீவனங்களுக்காக 20 கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்து எடப்பாடி பழனிசாமி உத்தரவிட்டார்.

மேலும் மாவட்டங்களில் நடைபெறும் வறட்சி நிவாரணப் பணிகள் குறித்து அமைச்சர்கள் மற்றும் உயரதிகாரிகள் நேரில் ஆய்வு செய்ய வேண்டும் என்றும் உத்தரவிட்டுள்ளார். இன்று நடைபெற்ற ஆலோசனைக் கூட்டத்தில் அமைச்சர்கள் திண்டுக்கல் சீனிவாசன், செங்கோட்டையன், தங்கமணி, ஜெயக்குமார் உள்ளிட்ட அமைச்சர்களும் உயர் குடிமைப் பணி அதிகாரிகளும் கலந்து கொண்டனர்.

Stay Updated with Tamil Flash News - Facebook's 'FbStart' Tamil APP

தமிழ்நாடு சார்ந்த செய்திகளை உடனுக்குடன் தமிழ் ஃப்ளாஷ் நியூஸ் அப்ளிகேஷனில் தெரிந்துகொள்ளலாம். இதுதான் நம்பர் ஒன் தமிழ் நியூஸ் ஆப்!

பயன்படுத்த க்ளிக் http://bit.ly/FreeTFN

Advertisement
Advertisement
Advertisement
Advertisement
Advertisement

எடிட்டர் சாய்ஸ்

Advertisement

MUST READ

Advertisement
[X] Close