Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

[X] Close

நாய்கள் துரத்தியதால் புள்ளி மான் கிணற்றில் விழுந்து உயிரிழப்பு..!

ராமநாதபுரம் மாவட்டம் கடலாடியில் குடிநீர் தேடி குடியிருப்புப் பகுதிக்கு சுமார் 4 வயது மதிப்புடைய ஆண் புள்ளி மான் வந்துள்ளது. இதனைக் கண்ட அப்பகுதி  நாய்கள் துரத்தியதில், மான் தப்பிக்க ஓடியபோது நிலைகுலைந்து, அருகில் உள்ள கிணற்றில் விழுந்து உயிரிழந்தது. தகவல் அறிந்து வந்த வனத் துறையினர் மற்றும் தீயணைப்புத் துறையினர் புள்ளி மான் சடலத்தை  மீட்டு பிரேத பரிசோதனைக்காக சாயல்குடி வன அலுவலகத்துக்கு அனுப்பி வைத்தனர். இது போன்று சம்பவங்கள் நடைபெறாமல் தடுக்க வனத் துறையினர் தண்ணீர் இன்றி வறண்டு கிடக்கும் கிணறுகளை மூடுவதற்கு கிணற்றின் உரிமையாளரிடம் பரிந்துரை செய்தனர். 

பருவ மழை முறையாக பெய்யாத காரணத்தால் கண்மாய், குளம் மற்றும் ஏரிகள் வறண்டு காணப்படுவதால் அவ்வப்போது குடிநீர் தேடி குடியிருப்பு பகுதிகளில் வன விலங்குகள் வருகின்றன. வனத் துறையினர் வன விலங்குகள் அதிகமாக வசிக்கும் இடங்களில் செயற்கை நீர்த் தொட்டிகளை அமைத்தால் இதைப் போன்ற சம்பவங்கள் நடக்காமல் இருக்கும் என்று கூறப்படுகிறது.

இரா.மோகன்

Stay Updated with Tamil Flash News - Facebook's 'FbStart' Tamil APP

தமிழ்நாடு சார்ந்த செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள... தமிழ் ஃப்ளாஷ் நியூஸ் அப்ளிகேஷன்! ஃபேஸ்புக்குக்கே பிடித்த நம்பர் 1 தமிழ் நியூஸ் ஆப்... Tamil Flash News..!

பதிவிறக்க... க்ளிக் http://bit.ly/FreeTFN

Advertisement
Advertisement
Advertisement
Advertisement
Advertisement

எடிட்டர் சாய்ஸ்

வெறும் ஆறே ரன்கள்.. போட்டியில் தோல்வி! ஆனாலும் அனைவரின் மனதையும் நெகிழவைத்த அந்த கிரிக்கெட் மேட்ச்! #MustRead #MondayMotivation
Advertisement

MUST READ

Advertisement
[X] Close