Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

[X] Close

தஞ்சாவூரில் தண்ணீருக்காக ஊருக்குள் புகுந்த முதலை..!

தஞ்சாவூர் வடுகக்குடியைச் சேர்ந்த வின்சென்ட் என்பவரின் வீட்டுக்குள் 7 அடி நீளமுள்ள முதலை புகுந்துள்ளது. இதைப் பார்த்து பதறிய மக்கள் தீயணைப்புத் துறைக்கு தகவல் அளித்தனர். தமிழகத்தில் நிலவும் கடுமையான வறட்சியின் காரணமாக பெரும்பாலான நீர் நிலைகள் தண்ணீர் இல்லாமல் வறண்டு காணப்படுகிறது. பெரும்பாலான ஊர்களில் மக்களுக்கே குடிப்பதற்கு தண்ணீர் கிடைக்காத சூழல் நிலவுகிறது.

தண்ணீர் தேடி மான், புலி போன்ற விலங்குகள் ஊருக்குள் புகும் சம்பவமும் அடிக்கடி நடைபெறுகிறது.  தஞ்சாவூர் வடுகக்குடி அருகே நீர்த்தேக்கம் உள்ளது. இந்த அணைக்கு, கொள்ளிடம் காவிரியில் இருந்துதான் தண்ணீர் வரவேண்டும். இந்தவருடம் காவிரியில் இருந்து தண்ணீர் வந்தாலும், இப்போது நீர்த்தேக்கம் வறண்டு போய் கிடக்கிறது. 

இந்த நிலையில் வடுகக்குடி என்ற கிராமத்தில் முதலை ஒன்று ஊருக்குள் புகுந்து விட்டது. அந்த கிராமத்தில் வின்சென்ட் என்பவரது வீட்டுக்குள் 7 அடி நீளமுள்ள முதலை இருப்பதைப் பார்த்து பதறிய பொதுமக்கள், தீயணைப்புப் படையினருக்கு தகவல் தெரிவித்தனர். விரைந்து வந்த தீயணைப்பு வீரர்கள், பொதுமக்களின் உதவியுடன் முதலையை மீட்டனர். இதனை அடுத்து மீட்கப்பட்ட முதலையை வனத்துறையிடம் ஒப்படைத்தனர். அவர்கள் முதலையை திருச்சி முக்கம்பு பகுதி ஆற்றில் பத்திரமாக விட்டனர். இதுகுறித்து தெரிவித்த அதிகாரிகள் 'தண்ணீர் பற்றாக்குறையின் காரணமாக முதலைகள் இடப்பெயர்ச்சியில் ஈடுபடுகின்றன' என்று தெரிவித்தனர்.

Advertisement
Advertisement
Advertisement

எடிட்டர் சாய்ஸ்

Advertisement

MUST READ

Advertisement
[X] Close